Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

‘மகிந்த சங்க’ கோமாளி (நக்கீர) புலவர்கள்!

13-வது திருத்தத்திற்கு ‘அப்பால் — இப்பால்’ பற்றி பாராளுமன்றத் தெரிவுக்குழுவே தீர்மானம் எடுக்கும்!

தெற்கு மக்கள் அதிகாரப் பரவலை எதிர்க்கவில்லை!   கிழக்கு மாகாண அமைச்சர் விமலவீர திசநாயக்காவும் அவர்களுக்கு மேல் ஒருபடி சென்று கிழக்கு மாகாண முதல்வருக்கு கருணா எச்சரிக்கை விடுத்துள்ளதும் யாவரும் அறிந்ததே.

இந்த இழுபறிகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால், அந்தக் குழு எடுக்கும் தீர்மானத்திற்கு தாமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது. நீங்கள் தெரிவுக்குழுவில் என்ன பணியாரம், அப்பம் சுடப் போகின்றீர்கள் என்பதும், உது குரங்கு அப்பம் புறித்த கதையாகத்தான் முடியும் என்பதும், ஊர் உலகறிந்ததே!

இந்தப் பணியார அப்பப் பறிப்பு விளையாட்டில் தாமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது’ மறந்துபோய் சொல்லியுள்ள ‘இவ்வுண்மைக்கு’ ஏனிந்த விக்கிரமாதித்தன் கதை விளக்கங்கள்.

 

காவல்துறை அதிகாரம் கொடுத்தால், இவருக்கு பெந்தரப் பாலத்தை கடக்க முடியாது. மற்றவருக்கு மகிந்தக் கவட்டைக் கடக்க முடியாது. அதற்கப்பால் இன்னொருவருக்கு பண்ணைப்பாலத்தைக் கடக்க முடியாது. ஏனெனில் இவர்களின் கவடுகளுக்குள் இருப்பதெல்லாம் ‘பேரினவாத ஓதக் கொ(ட்)டைகளை’ மூடியுள்ள பென்னாம்பெரிய இனவெறிக் கோமணங்கள் அல்லவோ! இதைக்கொண்டு இவர்கள், எப்படி நடப்பார்கள்? இனவெறிப் பாலங்களைக் கடப்பார்கள்? இந்த ஓதங்களால் கடக்க முடியாததை  மக்கள் கடப்பார்.

இதனால்தான் தெற்கு மக்கள் அதிகாரப் பரவலை எதிர்க்கவில்லை என்கின்றார் கிழக்கு மாகாண அமைச்சர் விமலவீர திசநாயக்கா  இவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்தானே? கிழக்கின் மாகாண சபைக்கு, என்ன அதிகாரங்கள் உள்ளன? சர்வாதிகார நாடுகளில உள்ளது போன்று  (சிவில் நிர்வாக நடைமுறை)  ராணுவக் கட்டளைத் தளபதியே மாகாண ஆளனராக உள்ளார். அவரின் கடந்தகால எதேச்சதிகார  நடவடிக்கைகளால், கிழக்கு மாகாணசபை தஞ்சாவூர்ப் பொம்மையாகவே உள்ளது.

இந்த எதேச்சதிகாரப் பட்டறிவிற்கூடாகவே, அம்மாகாணசபை காணிக்-காவல் அதிகாரங்களைக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால் தான் கூட்டமைப்பினருக்கு முன்பே நான் இவ்வதிகாரங்களைக் கோரினேன் என பிள்ளையான் சொல்கின்றார். இந்த நியாயக்கோரிகைக்கு கருணா அம்மான் சண்டித்தனப் பிகடனம் விட்டுள்ளர். இது முந்தி பிரபாகர எடுபிடி,  இப்போ மகிந்த எடுபிடி! இதற்கு வை திஸ் கெடுபிடி? எடுபிடி? இதற்கு தேவை அரச அதிகாரத்தையும், அதன் அணிகலனான மது-மாதுகளைச் சுவைப்பதே!  இத்தோடு நிற்கலாமே? இதற்கு ஏனிந்த மக்கள் விரோதம்?

இப்போ அரச அடிமை-குடிமை-எடுபிடியெண்டால், சிலர் மகிந்தச் ‘சங்கப’ புலவர்களாகி, நக்(கி)கீரர்களாகி இப்பொருள் குற்றம் குற்றமென கருணாவாட்டம் வெருட்டுகின்றார்கள். இன்னுஞ் சிலர் சங்கப்பெரும்  புலமை கொண்டு, பெரும் பெரும்  பட்டங்கள் எல்லாம் கொடுக்கின்றார்கள். யானை பார்த்த குருடர்கள் ஆட்டம் கதை கதையாய் சொல்கின்றார்கள். ஏனெனில் இதுவும் ஓர் ஓத(ல்) வருத்தம்தான். இவ்வருத்தம் மேலும் பரவாதிருக்க தடுப்பு மருந்துகள் தேவை. இது காலத்தின் கட்டாயம்!

-அகிலன் (31/01/2012)