Language Selection

பி.இரயாகரன் -2024
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை யாருக்கானது என்பதை, அனுரவின் கூற்று அம்பலமாக்குகின்றது. "செழுமையுடையவர் மேலும் செழுமையடைவதில் எமக்குப் பிரச்சனையில்லை, ஆனால் ஏழ்மையாக இருப்பவர் மேலும் ஏழ்மையாவதை விரும்பவில்லை" என்கின்றார். அனுரவின் தேசிய மக்கள் சக்தியின் இந்த அரசியலானது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் பொது விதியாகும்.

முதலாளித்துவத்தில் நுகர்வோரில்லாமல் சுரண்டலென்பது கற்பனை. நுகர்வோர் ஏழ்மையாவதென்பது, சுரண்டல் நின்று போவதற்கான பொது விதியாகும்.

முதலாளித்துவத்தில் சந்தையென்பது நுகர்வோரை அடிப்படையாகக் கொண்டது. நுகர்வோர் ஏழ்மையானால், அதாவது  வாங்கும் சக்தியை இழந்தால் சந்தை தேங்கிவிடும். அதாவது இலாபத்துக்கான முதலாளித்துவ உற்பத்திமுறை தேங்கிவிடும்.

முதலாளித்துவப் பொருளாதாரத்தில் "செழுமையுடையவர்கள் தொடர்ந்து செழுமையடைய", ஏழைகள்  வாங்கும் சக்தியைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும். இந்த விடயத்தில் அரசும், அரசின் பொருளாதாரக் கொள்கைகள் முன்வைக்கப்படுகின்றது. முதலாளித்துவத்தில் அரசென்பது, பொருள் உற்பத்தில் ஈடுபடும் அமைப்பல்ல. முதலாளித்துவத்தில் சுரண்டல் மூலம் "செழுமையடைபவர்கள் தொடர்ந்து செழுமையடையும்" கொள்கையைப் பாதுகாக்கும் இடத்தில் அரசு இருப்பதுடன், சுரண்டலைத் தொடர்வதற்கு ஏற்ப "ஏழ்மையாக இருப்பவர் மேலும் ஏழ்மையாவதைத்" தடுக்கின்றனர். இதையே அனுரவின் தேசிய மக்கள் சக்தி,  மக்களைச் சார்ந்த கொள்கையாக முன்மொழிகின்றது.


"கோத்தபய கோ கம" போராட்டக் காலமானது, மக்கள் வாங்கும் சக்தியை பாரியளவில் இழந்ததுடன், தொடர்சியாக அதிகரித்த வாழ்க்கைச் செலவு என்பது நுகர்வோரை வங்குரோத்தாக்கியுள்ளது. முதலாளித்துவ உற்பத்திகள் தேங்கவும், நின்று போகவும்.. தொடங்கியது. இந்தச் சூழலில் அன்னிய நிதிமூலதனத்தின் சூறையாடல், ஒட்டுமொத்;த நாட்டையும் திவலாக்கியது. 

இதற்குக் காரணம் ஊழல் மற்றும் ஆட்சியாளர்களே என்று கூறியவர்கள், ஊழலற்ற ஆட்சி மூலம் அமைப்புமுறையை (சிஸ்ரத்தை) பாதுகாக்க முனைகின்றனர்.

"செழுமையுடையவர் மேலும் செழுமையடைவ'தற்காக, மக்கள் ஏழ்மையாவதைத் தடுக்க முனைகின்றனர். பொருளாதார நிலைத்தன்மையைக் கொண்டு வருவதன் மூலம், சுரண்டலைத் தொடர்வதற்கு ஏற்ற சூழலை அமைக்க முனைகின்றனர். தேசிய மக்கள் சக்தி. முதலாளித்துவ பொருளாதார சமூக வாழ்வியற் கூறுகளைப் பாதுகாக்க, ஊழலுக்கு எதிரான திசையில் மக்களின் கவனத்தைத் திருப்பியுள்ளனர். 

ஊழலற்ற தேசிய மக்கள் அரசு மக்களுக்கு பொருளாதாரரீதியாக எதைப் புதிதாக உருவாக்கப் போகின்றது என்பதை யாரும் முன்வைப்பதில்லை, பேசுவதில்லை. "செழுமையுடையவர் மேலும் செழுமையடைகின்ற"  முதலாளித்துவ அமைப்புமுறையானது «ஊழலற்ற» என்ற அரசியல் மோசடிகள் மூலம், மக்களின் உழைப்புச் சுரண்டப்படுவதை அங்கீகரிக்கின்றது.

உழைப்புச் சுரண்டலென்பது ஊழலற்றது, சட்டபூர்வமானது என்ற பொதுமாயையைக் கட்டமைக்கப்படுகின்றது. உழைப்புச் சுரண்டல் தொடங்கி  நிதிமூலதனம் நடத்தி வரும் வரிச் சுரண்டல்கள் …, "ஏழ்மையாக இருப்பவர் மேலும் ஏழ்மை"யாக்குவதில்லை என்ற தேசிய மக்கள் சக்தியின் கொள்கையென்பது, மக்களை ஏமாற்றுகின்ற தந்திரங்களாலானது. 

அரசும், அரசைச் சுற்றி இருக்கும் அரசியல்வாதிகளின் ஊழல்களே அனைத்துக்கும் காரணம் என்று கூறிக் கொண்டு, உழைப்புச் சுரண்டலையும், நிதிமூலதனத்தில் வரிக் கொள்ளைகளையும் தொடர்ந்து பாதுகாக்க முனைகின்றது. பழைய அரசின் அதே பொருளாதாரக் கொள்கையையே, முன்வைக்கின்றனர்.    

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை, மக்களுக்கானதல்ல மூலதனத்துக்கானது. அரசு உற்பத்திக்கு இடமில்லை, தனியார் உற்பத்தியையே உயர்த்திப் பிடிக்கின்றது. இந்த கொள்கையே "செழுமையுடையவர் மேலும் செழுமையடைவதில் எமக்கு பிரச்சனையில்லை" என்கின்றது. செழுமையடைபவர்களை தொடர்ந்து பாதுகாக்கவும், உயர்த்திப் பிடிக்கவும் .. ஊழலுக்கு எதிராக அணிதிரளக் கோருகின்றது.               

தொடரும் 

22.10.2024

  1. டொலர் பொருளாதாரமா? தேசியப்  பொருளாதாரமா? - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 4
  2. சமூக மாற்றத்தை மறுதலிக்கும் தேசிய மக்கள் சக்தி . - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 3
  3. கள்ளரை வெளியேற்ற அனுரவுக்கு ஆதரவு" தெரிவிக்க வேண்டுமா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும்-பகுதி - 2
  4. மக்களின் குரலாக யார் இருக்கின்றனர்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் பகுதி - 1
  5. ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்
  6. பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஜே.வி.பி. குறித்த கற்பனைகளும் நிஜங்களும்.
  7. ஜே.வி.பி. மீதான அரசியல் அழுத்தங்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்
  8. தமிழ் தேசியமும் - சாராயக் கடையும் - பொலிஸ் அதிகாரமும்
  9. யாருக்கு வாக்களிக்க வேண்டும்!? ஏன்!? எதற்காக!?