Language Selection

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வாழிய வாழியவே
பல்லாண்டு தேர்தல்கள் வாழியவே

வாக்குச் சீட்டினில் கப்பல்கள் கட்டி
வானத்தில் பட்டமேற்றி
நீளமாய் ராக்கெட் விட்டு
கோழிகள் நாய்கள் மலத்தை
அள்ளிவீசுவோம் வாக்குச்சீட்டால்
- வாழிய வாழியவே
பல்லாண்டு தேர்தல்கள் வாழியவே

ஓடி நீ வாடா தோழா
எச்சிலைக் காறித்துப்பி
வாக்குச்சீட்டினை பிசைந்து மாற்று
சுவரொட்டிகள்மேலே உந்தன்
கோபத்தை எறிந்து காட்டு-
வாழிய வாழியவே பல்லாண்டு தேர்தல்கள் வாழியவே

 

அரிவாளும் சம்மட்டியும்
அருமந்த வாக்குச்சீட்டில்
வரைந்து நாம்
வாழ்த்துச் சொல்வோம்
-வாழிய வாழியவே
அருமந்த தேர்தல்கள் வாழியவே

 

கவிதைகள் எழுதச் சொல்லி
கடதாசி தாறார் வாங்கு
அறிவுக் கண்களைத் திறக்க நம்முன்
அரும் பெரும் வாக்குச்சீட்டு
அள்ளியே தாறார் வாங்கு
-வாழிய வாழியவே
கொள்ளையர் கோவணம் வாழியவே