உங்களைச் சுட்டி
விரலை நீட்டினால்
கல்விமான் என்ற
கவசம் காக்கும்.
ஆங்கிலம் எமக்கோ
அன்னிய மொழி தான்
அன்னை ஊட்டிய பாலொடு
பருகிய தமிழும் கூட
வேசி மொழியாமே
மன்னர்கள் கூட
மக்கள் குறை கேட்க
மாறுவேடம்
போடுவதுண்டு.
உங்களின் நாமமோ
பிரமுகராக
கேட்டதாய்
மட்டுமே
ஞாபகம்.
வேறேதும் அறியோம்
பாமரர் நாங்கள்.
எங்கள் குரலை
எங்கள் மொழியில்,
மக்களை வதைத்த
பாசிச இனவெறிப்
பேய்களின்
பயங்கரம்
தாண்டவமாடிய
தருணங்கள் எல்லாம்,
தன்னந்தனியாய்
உயர்த்தியபோது,
தங்கள் நாக்குகள்
எந்தத் திக்கில்
எந்த மொழியில்
திழைத்திருந்தனவோ?.
நண்டுப் பொந்துக்குள்
நரி குசு விட்டதாம்
தீவான் என்பவன்
நரியெனப் பகர்ந்தீர்.
வருக வருக
பொந்தினுள் இருந்து
வெளியே வருக
அறிவிலிகளான எமக்கு
ஆண்டைகளாகி
அன்பைப் பொழிக!!!