உருண்டோடின கணங்கள்
புறத்திலிருந்து
அகத்துக்குள்
குளிர் அருவியாய்
பாய்ந்தோடின சொற்கள்
மாற்றுமொழியின்றி
இரவல் மொழியில்
களமாடிய தோழனே
இருளினின்றும் நீங்கி
விடிகின்ற பொழுதின்
பூபாள ராகம்
செவிப் புலன்வழி
பாய்ந்தது.
வீழ்ந்தவர் பலரே
வீழ்த்தியோர்
வினையினித் தொடரா
விடிவினினை நோக்கிய
பாதைகள் வகுப்போம்
விடுதலையணியினில் நடப்போம்
அடங்காதிருப்போம்.
தத்துவம் எனும் தீயில்
இரும்பு தகததத்தாலும்
சுத்தியல் அடியில் படுகின்ற போதுதான்
கத்தியின் கூர்மை உருமாற்றடையும்
அடிக்கின்ற சுத்தியல் நமக்கு
அனுபவ விமர்சன ஆசான்
பட்டறையிட்டு செதுக்குவோம் நம்மை
பாட்டாளி வர்க்க பாட்டொன்றிசைக்க
பல மொழியுண்டு இசையுண்டு
பாடுவோம் வா நீ