Language Selection

பி.இரயாகரன் -2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுமந்திரனுக்கு எதிராக களமிறங்கியுள்ள கூட்டம், அயோக்கியர்களில் அயோக்கியர்கள். இவர்கள் கடந்தகாலத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் இரத்தத்தைக் குடித்து, சதையை உண்ட பாசிட்டுக்களுடன் கூடி, அவர்கள் போட்ட மனித எலும்புகளை கடித்துக் குதறியவர்கள். இன்று போலி "ஜனநாயகம்" பேசுகின்றனர்.

வாக்குப் போடுவதில் மோசடி, வாக்கு எண்ணிக்கையில் மோசடி, தேர்தல் முடிவுகளில் மோசடி.. என்பவை எல்லாம் தேர்தல் «ஜனநாயகத்»தில் உள்ளார்ந்த விதி. அரசே ஊழலும்;, லஞ்சமயமாகியும் விட்ட சமூக அமைப்பில், மக்களுக்கு சட்டத்தையும் - நீதியையும் மறுப்பதே «ஜனநாயக»மாகிவிட்டது. இதுவே இன்று அனைத்துமாக சமூகத்தில் புளுத்துக் கிடப்பதால் - தேர்தல் இதற்கு விதிவிலக்கல்ல. ஜனநாயகத்;தின் பெயரில் மக்களுக்கு ஜனநாயக மறுப்பு என்பதே எங்குமான எதார்த்தம்;. இந்த வகையில் தேர்தல், தேர்தல் நடைமுறைகள், தேர்தல் முடிவுகள்.. இதற்கு எந்த விதத்திலும் விதிவிலக்கல்ல. எல்லாம் சாத்தியமானது.

இதற்கும் சுமந்திரன் விடையத்துக்கும் எந்த சம்மந்தமுமில்லை. "பெண்" "பெண்ணியம்" {ஜனநாயகம்" என்று கண்ணீர் விட்டுப் புலம்ப, அதை வீடுவரை சென்ற "ஜனநாயக" செத்துவிட்டதாக கூடி செத்த வீPடு நடத்தும் கூட்டத்தின் கடந்த காலம் என்ன?

புலிகள் காலத்தில் சாதாரண மக்கள் பேச்சுரிமையிழந்து இருக்கவும், பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தைக் கூட உணர முடியாத வண்ணம் யார் தடுத்தனரோ, அப்படித் தடுத்ததை சரியென்று கூறி யார் கூடி கும்மியடித்து பாசிசத்தை தொழுதனரோ, அவர்கள் இன்று திடீர் «ஜனநாயகம்» பேசுகின்றனர். மக்களை ஒடுக்கியவர்களின் அன்றைய பாதுகாவலர்கள், இன்று அரசியலில் திடீர் வேசங்கள்.

ரவிராஜ் சசிகலாவின் வெற்றியைப் பறித்ததான கண்ணீர் நாடகத்தில் களமிறங்கியுள்ள சுதந்திரக்கட்சி பாராளுமன்ற பிரதிநிதி, மகிந்தா அரசின் ஒரு எடுபிடி ஏஜண்டாக தன்னுடைய அந்த அரசியல் முகத்தை மூடிமறைத்துக் கொள்ள சுதந்திரக்கட்சி வேசம்; போட்டு வென்றவர். இலங்கை தளுவிய வகையில் சுதந்திரக்கட்சி மகிந்தா அணியோடு தேர்தலில் நிற்க, யாழ்ப்பாணத்தில் ஒரு விதிவிலக்கு. ஜனநாயகத்தின் பெயரில் மக்களை ஏமாற்ற. என்ன ஜனநாயக வித்தை. ஒடுக்குவோருக்காக சுதந்திரக் கட்சி அணியில் போட்டியிட்ட ஒரு உறுப்பினர், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து «புலிகளால் கொல்லப்பட்ட செல்வி குறித்தும், ஒடுக்கும் வெள்ளாளிய சிந்தனையில் வாக்குப் பொறுக்கும் அரசியல் பித்தலாட்டங்களை கடந்ததல்ல - இவர்களின் "ஜனநாயக" வேசங்கள்.

இப்படி ஒடுக்குமுறை குறித்தும், ஜனநாயகம் குறித்து பேசுகின்ற இவர்களின் அரசியல், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்ததல்ல, ஒடுக்குமுறை சார்ந்தது. வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகளை காலாகாலமாக ஒடுக்கிய ஒடுக்குமுறையாளர்கள். இனவாதம் பேசுகின்ற, ஒடுக்குமுறையின் அரசியல் பிரதிநிதிகள். தங்கள் வீட்டு பெண்கள் உட்பட, பெண்களை ஒடுக்கும் ஆணாதிக்கத்தின் காவலர்கள். இதையெல்லாம் இனவாதம் பூசி மூடிமறைக்கின்ற அரசியல் குள்ளர்கள்.

அரசும், புலிகளும் ஜனநாயகத்தின் மூச்சுக் குழாயைக் நெரித்துக் கொன்ற போது, இன்றும் அதை தத்தம் பங்குக்கு நியாயப்படுத்துகின்றவர்கள் தான், {ஜனநாயகம்" குறித்து மூக்கால் சிந்துகின்றனர்.

சுமந்திரன் சுரண்டும் நவதாராளவாத சமூக அமைப்பானது, இன-மத முரண்பாடின்றி சுதந்திரமாக சுரண்டுவதையே ஜனநாயகமாகவும் - அதற்கு தடையானதை ஜனநாயக விரோதமானதாகவும் கருதுகின்ற ஒருவர். இதை இனவாதிகள் - மதவாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை, மாறாக இன-மத முரண்பாட்டைக் கொண்டு சுரண்டுவதையே கோருகின்றனர்.

இந்த முரண்பாடு தான், இரண்டு அணிக்குமிடையிலான அடிப்படை வேறுபாடு. சுமந்திரன் அரசாங்கத்துடன் சேர்ந்து இனப் பிரச்சனைக்கு தீர்வை கண்டடைந்து விடுவார் என்ற அச்சமும், தங்களை மிஞ்சி சுமந்திரனின் அறிவுசார் புலமை சார்ந்து தமிழ் தலைமை ஏற்பட்டுவிடும் என்ற பீதியுமே, சுமந்திரன் குறித்த புலம்பல்களின் பின்னுள்ள அரசியல் சாரம். இதை தடுக்கவேண்டும் என்பதே, இதன் பின்னுள்ள அரசியல். எதிர்காலத்தில் தமிழ் இனவாத - மதவாத பிழைப்புக்கு, சுமந்திரனால் கேடு நிகழ்வதை ஜீரணிக்க முடியாத கூட்டம், சசிகலாவின் நாடகத்திற்கு வழி மொழிகின்றனர். இதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.