"இலங்கையின் சுதேச குடிமக்களின் முதல் மொழி தமிழாக" இருக்கும் போது, அதே சுதேச குடிமக்களின் முதல் மதம் பவுத்தமே. 2000 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றுக் குறிப்புகள் இதைத் தான் கூறுகின்றது. தமிழ் மொழியை குறிப்பிடும் விக்கினேஸ்வரன், பவுத்தத்தை குறிப்பிடத் தவறியதன் மூலம், இனவாதத்தைத் தூண்டி தனது அடிப்படைவாத மதவாதத்தையே முன்னிலைப்படுத்தி உள்ளார். வரலாற்றைக் குறுக்கியும் - திரித்தும் பொய் பேசுவதே – மதவாதிகளினதும் இனவாதிகளினதும் அடிப்படைக் குணம்.
விக்கினேஸ்வரன் போட்டுத் திரியும் பட்டை நாமம், இலங்கை மண்ணின் சுதேச குடிகளின் வரலாற்றுக்;கே சொந்தமல்ல. மாறாக பார்ப்பனிய வழிவந்த வெள்ளாளிய ஆறுமுகநாவலர், வெள்ளாளருக்கு புகுத்திய சாதிய அடையாளங்கள். இன்று அது வெள்ளாளியமாக சமூகத்தில் வக்கிரமடைந்து - இந்துத்துவம் என்ற இந்திய பார்ப்பனிய வெள்ளாளியமாக புளுக்கத் தொடங்கி இருக்கின்றது.
இலங்கையில் இன்று மத அடிப்படைவாதங்கள் பிரிவினைவாதங்களாக மாறிவருவதுடன் - அவை புளுக்கத் தொடங்கி இருக்கின்றது.
பட்டை நாமம் போட்டுக் கொண்டு, தமிழ் மொழியை முன்னிறுத்துவதன் பொருள் இதுதான். பாட்டை நாமம் போட்ட ஒருவன் அனைத்து மக்களின் பிரதிநிதியாக ஒருநாளும் இருக்க முடியாது. நீதி, நியாயத்தை கோரும் தகுதியையே பட்டை நாமமானது, தனது உடல் மொழியிலேயே மறுதளித்து விடுகின்றது. இலங்கைப் பேரினவாத பௌத்த அரசை பார்த்து தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரும் ஒருவர், பட்டை நாமம் போட்டுக் கொண்டு கேட்பதன் பொருள், தங்கள் ஒடுக்கும் வெள்ளாளிய அரசியல் அதிகாரத்தை தான்.
விக்கினேஸ்வரனை பாராளுமன்றத்துக்கு தேர்ந்து அனுப்பியது, தீவிர இந்து வெள்ளாளியர்களே. அதற்காகவே தனது உடல் மற்றும் மொழியால் பாராளுமன்றத்தில் களமிறங்கி இருக்கின்றார். இலங்கையில் இனமத அடிப்படையில் மக்களை பிரித்து வாக்குகளை பெறும் ஜனநாயக விரோத சூழலில், விக்கினேஸ்வரன் தீவிர வெள்ளாளிய வாக்குகளைப் பிரித்தெடுத்ததன் மூலமே பாராளுமன்றம் சென்றவர்.
இப்படிப்பட்ட பின்னணியில் சென்று பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் "சுயநிர்ணயம்" குறித்தும் "தேசம்" குறித்தும் பேசியதன் மூலம், வெள்ளாளிய தமிழ் அரசியல் அதிகாரத்தையே கோரியிருக்கின்றார். தமிழனைத் தமிழன் ஒடுக்கும் வெள்ளாளியத்தனத்துக்கு எதிராக பேச முடியாதவர்கள், தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து பேசுகின்ற பித்தலாட்டமே – காலகாலமாக அரங்கேறும் வெள்ளாளிய நரித்தனம்;.
தமிழ் மக்கள் மத்தியில் ஒடுக்குமுறையற்ற ஜனநாயக சமூகத்தை முன்வைத்து அதை அணிதிரட்ட முடியாத வெள்ளாளியத்தனம் பிறரிடம்
"குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையுடன் மரபு பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் தேசம் என்று அங்கீகரிக்கப்படுவதன் பிரகாரம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த உரிமைகளை அங்கீகரிப்பதுடன் கடந்த காலம் பற்றிய தவறான வரலாற்று கண்ணோட்டங்களை களைந்தால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும்"
என்று கூறுவதன் மூலம், வெள்ளாளிய ஒடுக்குமுறையை செய்யும் உரிமையைத் தம்மிடம் தரும்படி கோருகின்றனர்.
அதாவது தமிழனைத் தமிழன் ஒடுக்கும் வெள்ளாளிய சமூகத்தை முன்னிறுத்திக்கொண்டு - அதன் பிரதிநிதியாக இருக்கும் ஒருவன் "சுதந்திரத்தை" தருமாறு, தன்னை "சமத்துவமாக" நடத்துமாறு கோருகின்றார். தமிழ் சமூகம் மீதான தங்கள் வெள்ளாளிய அதிகாரத்தை அங்கீகரிக்குமாறு, அதை தம்மிடம் வழங்க மறுப்பது ஜனநாயக விரோதமானது என்று கூச்சல் போடுகின்றனர்.
"தவறான வரலாற்றுக் கண்ணோட்டங்களை களைந்தால் மட்டுமே" இதற்கு தீர்வு என்று, வரலாற்று திரிபுகளைக் கொண்ட பட்டை நாமத்தை அணிந்தபடி கோருவது - அரசியல் கூத்தாக பாராளுமன்றத்தில் அரங்கேறுகின்றது. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, அந்த அதிகாரத்தைக் கொண்டு, கொலை மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றத்துக்காக சிறை சென்ற சாமியாரை, சட்டத்துக்கு புறம்பாக விடுதலை செய்யுமாறு இந்தியப் பிரதமரை சந்தித்து கேட்ட பொறுக்கி – தனது வெள்ளாளியப் பொறுக்கித்தனத்தையே பாராளுமன்றத்தில் கோரினார்.
இலங்கையின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையையோ, அதிகாரத்தையோ அல்ல. மாறாக தமிழ் மக்களை ஒடுக்கும் அதிகாரத்தை அங்கீகரித்து அதைப் பகிருமாறு கோருகின்றனர்.
சிங்களவன் பெயரில் பவுத்த ஆட்சி இருப்பது போன்று, தமிழனின் பெயரில் இந்து வெள்ளாளிய ஆட்சி அமைவதையே பாராளுமன்றத்தில் கோரியதைத் தாண்டி - இதற்கு வேறு விளக்கம் கிடையாது.