ஈழத்து வெள்ளாளியத் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி - அதை அரசியல் ரீதியாக பாதுகாக்கும் திருமுருகன் காந்தியின் (மே 17யின்) அரசியல், பார்ப்பனியமல்லாது வேறு எதுவாகவும் இருக்க முடியாது. வெள்ளாளியம் என்பது பார்ப்பனியத்தின் மற்றுமொரு முகமே. அது, தானல்லாத அனைத்தையும் "துரோகி" என்று கூறும், அதிகாரம் இருந்தால் கொல்லும்.
இனவாதத்தை – மதவாதத்தை – சாதியவாதத்தை, நிறவாதத்தை .. முன்வைக்கும் அடிப்படைவாதிகள், ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டுவதை தங்கள் அரசியலாக கொள்கின்றனர். தங்களுக்கு முரண்பாடன கருத்துகள் தொடங்கி சினிமா வரை அனுமதிப்பதில்லை. முரளிதரன் பற்றிய படத்துக்கு அது நடந்;தது. முரளிதரன் அரசியல் ரீதியாக யார் என்பதனாலல்ல, ஜனநாயக மறுப்பு அரசியல் ரீதியாக கட்டமைக்கப்படுகின்றது. பாசிச சிந்தனை அரசியலாக்கப்படுகின்றது, நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
16.10.2020 இல் பிரான்சில் முகமது நபியின் கேலிச் சித்திரத்தை கருத்துச் சுதந்திரத்தின் அடையாளமாக ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களுக்கு காட்டியதற்காக, அவரின் தலையை வெட்டியது இஸ்லாமிய அடிப்படைவாதம். இந்தக் கேலிச் சித்திரத்தை வரைந்த பத்திரிகை அலுவலகம், 2015 இல் தாக்குதலுக்குள்ளாகி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பலரைக் கொன்றனர். இன்று விஜய் சேதுபதியையும் - முத்தையா முரளிதரனையும் "துரோகி" என்று கூறுகின்ற இனவாத தமிழ் சங்கிகள், பிரான்சில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதைச் செய்தனரோ - அதைத்தான் முன்வைக்கின்றனர். ஆயுதமிருந்தால் அவர்களை கொல்லுவார்கள். இதைத்தான் புலிகள் செய்தனர். புலிகளின் மண்ணில் மாற்றுக் கருத்துக்கு மரணதண்டனை வழங்கினர். மாற்று இயக்கத்தில் இருந்தவர்கள் யாரும் அந்த மண்ணில் உயிர் வாழமுடியாது போனது. இதைத்தான் திருமுருகன் காந்தி அரசியல் ரீதியாக சரியானது என்று, இதற்கு திரித்து புரட்டி அரசியல் விளக்கம் கொடுக்கின்றார்.
வலதுசாரியப் பாசிச வழிவந்த வெள்ளாளியப் புலியை முன்னிறுத்தியே, மே 17 இயக்கத்தை உருவாக்கியவர் திருமுருகன் காந்தி. ஈழத்துப் பாசிச வெள்ளாளிய அரசியலை புனிதப்படுத்திக் கொண்டாட, புலியை ஒடுக்கப்பட்ட மக்களின் (இடதுசாரி) இயக்கமாகவும், வெள்ளாளியத்துக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்ட இயக்கமாகவும், அரசியல் ரீதியாக திரிக்கின்ற வெள்ளாளியச் சங்கியாக தன்னை முன்னிறுத்துகின்றார்.
அண்மையில் முத்தையா முரளிதரன் படத்துக்கு எதிரான தங்கள் சங்கிப் பாசிச அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்த, வரலாறுகளை திரித்துப் புரட்டிக் காட்டுகின்றார். இதன் மூலம் ஈழத்து வெள்ளாளிய அரசியல் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தி, தான் ஆவணங்களின் அடிப்படையில் பேசுவதாக கூறும் இந்த மே17 சங்கி, எந்த ஆவணத்தையும் முன்வைக்கவில்லை. இந்த வெள்ளாளிய சங்கிகளை ஆவணங்கள் மூலம், அதன் போலித்தனத்தை அம்பலப்படுத்திப் போராட வேண்டியிருக்கின்றது.
இடதுசாரி வெறுப்பையும் புலிகளின் கொலைகார முகத்தையும் அரசியலாகக் கொண்டு - புலிகளின் அரசியல் வழியில் தன்னை முன்னிறுத்துகின்றார் திருமுருகன் காந்தி. மலையக மக்களின் பிரஜாவுரிமைப் பறிப்பை, சிங்கள இடதுசாரிகள் - முற்போக்குவாதிகளும் ஆதரித்ததாக கயிறு திரித்து கதை சொல்லுகின்றார். யாழ்ப்;பாணிய வெள்ளாளியக் கட்சியான தமிழரசுக்கட்சி மட்டுமே போராடியது என்ற அரசியல் பித்தலாட்டங்களைச் செய்வதன் மூலம், தமிழக சங்கிகளுக்கு முண்டு கொடுக்க முனைகின்றார். இடதுசாரி வெறுப்புடன் கடந்தகால இலங்கை இடதுசாரிய வரலாற்றையே திரித்துப் புரட்டுகின்றார்.
இப்படிப் பாசிசப் புலிகளின் அரசியல் நீட்சியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு உருவான மே 17 இயக்கம், தமிழக அரசியல் சூழலுக்கு ஏற்ப என்ன தான் பெரியாரிய ஆதரவு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பை முன்வைத்தாலும், அது இலங்கையில் பார்ப்பனியத்துக்கு நிகரான வெள்ளாளியத்தை முண்டு கொடுப்பதற்காகவே. இந்த அரசியலென்பது இலங்கையில் இந்திய பார்ப்பனியத்தின் அரசியல் எடுபிடியாக இருப்பதை, பின்பக்க வழியாக உறுதி செய்கின்றது.
பா.ஜ.க பார்ப்பனியத்தை அரசியல் ரீதியாக விரிவுபடுத்தவும், மக்களை காவிமயப்படுத்தவும், பெரியாரிய - அம்பேத்கரியத்தை தன்வசப்படுத்த போடும் அரசியல் வேசங்கள் போல் தான் - வெள்ளாளியத்தை முன்னிறுத்தி அதன் மூலம் தமிழகச் சங்கிகளை உருவாக்குகின்றனர். இப்படி உருவாகும் இனவாதச் சங்கிகள் இயல்பிலேயே, இந்துத்துவ சங்கியாகவே செயற்படுவார்கள். இதற்காகவே வெள்ளாளிய, ஈழ தமிழ் தேசியத்தை நியாயப்படுத்தி, அதை முன்னிறுத்துகின்றனர்.
முத்தையா முரளிதரனுக்கு எதிரான மே 17 (திருமுருகன் காந்தி) தனது பேட்டியில், தனது வெள்ளாளிய அரசியலை நியாயப்படுத்த - ஈழ வரலாறு பற்றித் திரித்து – புரட்டுகின்றார். பார்க்க : மே 17 திருமுருகன் காந்தியின் பேட்டி
விடுதலை இயக்கங்கள் ஒடுக்கப்பட்ட (இடதுசாரிய) இயக்கங்களாம்!
ஒடுக்கப்பட்ட இயக்கங்களாக யாரை திருமுருகன் காந்தி போன்ற தமிழ்ச் சங்கிகள் அடையாளப்படுத்துகின்றனரோ, அவர்கள் அனைவரும் ஒடுக்கும் இந்திய அரசின் கைக்கூலிகளாக செயற்பட்டவர்கள். ஒடுக்கும் இந்திய அரசு கொடுத்த ஆயுதப் பயிற்சியுடன், அவர்கள் கொடுத்த ஆயுதத்தையும் - பணத்தையம் கொண்டு, இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக புரட்சி செய்தார்கள் என்று கூறுகின்ற தைரியம் - வரலாற்றை திரிக்கின்ற பார்ப்பனிய வெள்ளாளியச் சங்கிகளால் மட்டும் தான் முடியும். அதைத்தான் மே 17 சங்கியான திருமுருகன் காந்தி முன்வைக்கின்றார். பயிற்சியை வழங்கிய இந்திய அரசு அன்று எப்படிக் கூறியதோ, அதை இன்று மீளக் கூறுகின்றார்.
புலிகள், ரெலொ, புளட், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப்.. இந்தியக் கூலிப்படையாகவே பயிற்சி பெற்றவர்கள்;, அவர்கள் கொடுத்த ஆயுதம் - பணத்துடன் நாடு திரும்பியவர்கள், சொந்த மக்களை ஒடுக்கத் தொடங்கினார்கள். இதற்கு மாறாக ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்திருக்கும் அரசியலையோ, நடைமுறையையோ கொண்டிருக்கவில்லை. வர்க்கம், சாதியம், ஆணாதிக்கம், இனவாதம் .. கடந்த ஜனநாயகத் தேசிய இயக்கமாக இருந்ததில்லை. மாறாக தமிழனைத் தமிழன் ஒடுக்கும் சமூக அமைப்பின் மேல் ஏறிக் குந்திக் கொண்டனர். தமக்குள் யாருக்கு அதிகாரம் என்ற முரண்பாட்டால், தமக்குள் மோதிக்கொண்டனர்.
அதேநேரம் இயக்கத்திற்குள்ளும், இயக்கத்திற்கு வெளியிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையைக் கோரியவர்களை தேடி தேடிக் கொன்றனர். இப்படிக் கொல்லப்பட்டவர்களின் பின் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய தனித்தனி வரலாறுகள் உண்டு. அங்குமிங்குமாக மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்தன. இதற்கான ஆவணங்கள் எம்மிடம் நூற்றுக்கணக்கில் உண்டு. (அதில் சில இக்கட்டுரையின் தொடர்ச்சியில் இணைக்கப்பட்டுள்ளது. பார்க்கவும்.)
பேரினவாத அரசு தமிழ் மொழி பேசும் மக்களை ஒடுக்கியதால் - தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வரையறையானது, தமிழனைத் தமிழன் நின்று ஒடுக்குபவனின் வெள்ளாளிய அரசியலாகும்;. இதைத்தான் திருமுருகன் காந்தி உள்ளிட்ட சீமான் வரையான தமிழகச் சங்கிகள் முன்வைக்கின்றனர். தமிழனைத் தமிழன் ஒடுக்குகின்றதை எதிர்த்து, பேரினவாதத்துக்கு எதிராகப் போராடுவது மட்டும் தான், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம். இதை மறுக்கின்ற வெள்ளாளியமே அரசியல் ரீதியாக, பாசிசமாக பரிணமிக்கின்றது. பின் இணைப்புக்களை பாருங்;கள். இவைகளில் பெரும்பாலானவை புலிப் பாசிசம் கோலோச்ச முன்பு, ஜனநாயகத்தின் இறுதி மூச்சு இருந்த காலத்தில் வெளிவந்தவை.
பேரினவாதம் இன ரீதியாக மக்களை ஒடுக்கிய போது, தமிழனைத் தமிழன் ஒடுக்கும் வெள்ளாளியமானது வர்க்கம், இனம், சாதி, ஆணாதிக்கம், பிரதேசவாதம் .. என்று, பல வடிவங்களில் தமிழனையே ஒடுக்கியது, தொடர்ந்து ஒடுக்குகின்றது. ஈழத்து இயக்கங்கள் ஒடுக்குவதையே, அரசியலாகச் செய்தனர். புலிகள் பிற இயக்கங்களை படுகொலை செய்து ஒடுக்கிய பின், தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி - பாசிசத்தை நிலைநாட்டினர். இதைத்தான் தமிழகச் சங்கிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம்; என்கின்றனர். இப்படி ஒடுக்கியிருந்தால் எப்படி பெரிய படையைப் புலிகள் திரட்டி இருக்க முடியும் என்று, பாசிசத்துக்காக திருமுருகன் காந்தி வக்காளத்து வாங்குகின்றார். ஜெர்மனிய மக்களையே ஒடுக்கி உருவான நாசிகளின் கிட்லரின் பாசிசம், எப்படி ஜெர்மனிய மக்களை பெரும்படையாக திரட்டியதோ அப்படித்தான் இதுவும்.
1986 - 1987 ஆண்டுகளின் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஆயுதமுனையில் இயக்கங்கள் ஓடுக்கிய போது, ஒடுக்கப்பட்ட மக்கள் யாழ் பல்கலைக்கழத்துடன் இணைந்து "மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்", "மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்." என்று கோரிய போது, இது "..விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய மேலும் இரு கோரிக்கைகள்" என்று கூறி - புலிகள் அந்தப் போராட்டத்தை ஒடுக்கி அதன் தலைவர்கள் பலரை கொன்று குவித்தனர். இப்படி ஜனநாயகக் கோரிக்கை புலிகளை அரசியல் அனாதையாக்கும் என்று கூறிய புலிகளின் அரசியலை, திருமுருகன் காந்தி ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியலாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாகவும் அறிமுகப்படுத்துகின்றார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான புலிகளின் ஒடுக்குமுறைகளை அடுத்து, 1986 இறுதியில் நடந்த போராட்டத்திற்கு ஆதரவாக 200 க்கு மேற்பட்ட துண்டுப்பிரசுரங்கள் - அறிக்கைககள் வெளிவந்தன. இந்தப் போராட்டம் நடத்திய ஊர்வலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவின் இணைப்பில், இவற்றில் சில இணைக்கப்பட்டுள்ளது பார்க்க. 30 நாட்களாக தொடர்ந்த போராட்டத்தின் ஒரு நாள் காட்சி. பார்க்க ஊர்வலம் மற்றும் ஆவணங்கள்
இப்படி தான் இயக்கங்கள் மக்களை ஒடுக்கினவே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்திருந்ததில்லை. ஆம் தமிழனைத் தமிழன் ஒடுக்கும் வெள்ளாளிய சமூக ஒடுக்குமுறையை பிரதிநிதித்துவம் செய்தனர்.
இப்படி இந்தியக் கூலிப்படையாக வளர்ந்த இயக்கங்களில் ரெலோ பஞ்சாப்பில் சீக்கியர் மேலான பொற்கோயில் தாக்குதலில், தன்னை ஒரு கூலிப்படையாக இணைத்துக் கொண்டு, ஒடுக்கியவனுக்காக களமாடியது. திருமுருகன் காந்தி தன் பேட்டியில் சாதிக்கு எதிராக போராடியதாக முன்னிறுத்தும் சிவாஜிலிங்கம், இந்தக் கூலிப்படையில் பயிற்சி பெற்ற ஒருவர். புலிகளிள் ஒடுக்குமுறைக்குப் பின், இலங்கை அரசின் கூலிப்படையாக தெற்கில் செயற்பட்டவர்களில் ஒருவர். 1986 இல் ரெலோவை சந்திகளில் உயிருடன் புலிகள் எரித்த போது, பிடிபட்டு இருந்தால் உயிருடன் எரிக்கப்பட்டிருக்கக் கூடிய ஒருவர்.
இந்தியக் கூலிப்படையாக இருந்த புலிகளோ, இந்திய அரசிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, 1985 ம் ஆண்டு அனுராதபுரத்தில் 150 க்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைகளைக் கொன்று குவித்தனர்.
பார்க்க அனுதாரபுர கொலை வெறியாட்டத்தை.
அனுதாரபுர கொலை வெறியாட்டத்தை பக்கம் 26 இல் பார்க்கவும்.
http://padippakam.com/padippakam/document/NLFT/ilakku06.pdf
இதுவா ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு? இந்திய அரசு தன் பிராந்திய மேலாதிக்க நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக புலிகளைக் கொண்டு நடத்திய அனுராதபுர தாக்குதல் மூலம், திம்பு பேச்சுவார்த்தையை தன்நலன் சார்ந்து இந்தியா நடத்தியது. இதற்காக புலித் தாக்குதல் திட்டமிடப்பட்டது, இதற்காக ரெலொ பல தொடர் தாக்குதலை நடத்தியது.
இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கூலிப்படைகளைக் கொண்டு, இந்திய அரசின் வேறுபட்ட அணுகுமுறைகளே, கூலிப்படைகளுக்கு இடையில் மோதலை உருவாக்கியது. அதேநேரம் இந்திய அரசின் அணுகுமுறையும், புலிகளின் அதிகார வெறியுமே, புலிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முறுகலாக – மோதலாக மாறியது. இந்தியாவுடனான புலி யுத்தம் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் இருந்தல்ல. மாறாக தங்கள் குழு அதிகாரம் - தனிநபரின் அதிகார வெறியின் அடிப்படையில், இந்தியா - புலி மோதல் நடந்தேறியது. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அடிப்படையில் அல்ல.
சாதிக்கு எதிராக இயக்கங்கள் போராடியதாக சங்கிகளின் திரிபுகள்
தமிழனைத் தமிழன் ஒடுக்கும் வெள்ளாளியத்துக்கு எதிராக இயக்கங்கள் போராடியதாக, தமிழக சங்கியாக தன்னை முன்னிறுத்தும் திருமுருகன் காந்தி - சிவாஜிலிங்கத்தை துணைக்கழைக்கின்றார். இவரோ இந்தியப் பயிற்சி பெற்ற கூலிப்படைகளாக மக்களை ஒடுக்கிய லும்பன்களில் ஒருவன்.
இந்த ரெலோ (இயக்கங்கள்) வெள்ளாளிய சமூகத்தை பாதுகாத்து, சாதியப் போராட்டத்தை ஒடுக்கியதே வரலாறு. அதிலும் சிவாஜிலிங்கத்தின் ரெலொ சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை கொடூரமாக ஒடுக்கிய ஆதாரங்களை வரலாற்றில் இருந்து எடுத்துக் காட்ட முடியும்.
சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மண்டான் மக்கள் வெள்ளாளிய நில ஆக்கிரமிப்புகளை எதிர்த்து 1985 இல் போராடிய போது, ரெலோ அந்த வெள்ளாளிய நில ஆக்கிரமிப்பாளர்கள் சார்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் துப்பாக்கியால் சரமாரிய சுட்டு, போராட்டத்தை ஒடுக்க முனைந்தது. இதை அடுத்து அந்தச் சுற்று வட்டாரத்தில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டதால், ரெலோ தப்பியோடியது. ஒடுக்கப்பட்ட இந்த மண்டான் மக்களின் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர்கள் நாங்கள். இது போன்று ரெலோ ஒடுக்கப்பட்ட மக்களிள் முன்னணியாளர்களை கடத்திய போது, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட எனது ஊர் மக்கள் தெல்லிப்பழையில் வீதியை மறித்து போராட்டத்தை நடத்தினர். இதன் போது, அவர்கள் மேல் சரமாரியாக சுட்டனர். இவை அனைத்தும் இந்தியா கொடுத்த ஆயுதங்களும் ரவைகளும் தான். இவை எல்லாம் 1984 – 1986 களில் நடந்தேறியது. பார்க்க விடுதலை
இயக்கங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் பக்கம் 14
http://padippakam.com/padippakam/document/NLFT/ilakku06.pdf
இப்படி சிவாஜிலிங்கத்தின் ரெலொ நடத்திய ஒடுக்குமுறையும் மனித வேட்டைகளும் எண்ணற்றவை. அவற்றில் சில-
ஏனிந்த மனித வேட்டை
http://padippakam.com/padippakam/document/NLFT/nlft0001.pdf
தோழர் நேருக்கு அஞ்சலி - பகக்ம் 32
http://padippakam.com/padippakam/document/NLFT/ilakku05.pdf
புரட்சிகர முத்திரைகளும் கொலை வெறி பிடித்த முகங்களும்
http://padippakam.com/padippakam/document/NLFT/nlft0004.pdf
இவர்களா ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகப் போராடினர்!? இல்லை இவர்கள் தமிழனைத் தமிழன் ஒடுக்கும் வெள்ளாளியத்திற்காக போராடினர். இது தான் ஒடுக்கப்பட்டவனின் வரலாறு.
மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிப்பும் – வெள்ளாளிய பார்ப்பனிய திரிபுகளும்
திருமுருகன் காந்தி மலையகமக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதை பற்றியதான தனது வரலாற்று புரட்டை முன்வைக்கின்றார். 1948-1949 பிரஜாவுரிமை சட்டத்தை மலையக மக்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வந்த போது, இன அடிப்படையில் கொண்டு வரப்பட்டதல்ல. வர்க்க அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள் மலையக மக்கள் ஆதரவு பெற்று இலங்கை ஆட்சியை பாராளுமன்ற தேர்தலின் மூலம் பெற்று விடுவார்கள் என்ற அச்சத்தில் பிராஜாவுரிமை பறிக்கப்பட்டது. 1947 இல் நடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் கம்யூனிஸ்ட்டுகளின் வெற்றியின் பின் - ஒடுக்கப்பட்ட மலையக மக்களின் வாக்குகள் இருந்தது. இதே அரசியல் காரணத்தினால் தான் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் அதை ஆதரித்தது. அரசு தன் வர்க்க நலனை மூடிமறைக்க, இனவாதத்தை கக்கியது. யாழ் வெள்ளாளிய காங்கிரஸ் தனது வர்க்க மற்றும் சாதிக் கண்ணோட்டத்தில் அணுகியது. தோட்டங்கள் பல தமிழ் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு சொந்தமாக இருந்தது.
பிரஜாவுரிமையைப் பறித்த போது இடதுசாரிகள் எதிர்த்தனர். தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இடதுசாரிகள் தங்கள் வர்க்க அரசியலுக்கு துரோகம் இழைக்கும் வரை, மலையக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தனர். அதே போல் தொடர்ச்சியாக எல்லா இனவாதங்களையும் எதிர்த்தனர். அன்று அரசில் மந்திரி பதவி பெற்ற தமிழ் காங்கிரஸ் இதை ஆதரித்ததையடுத்து, செல்வநாயகம் அதில் இருந்து விலகி புதிய கட்சியை உருவாக்கினார். அவரின் சட்ட வரம்புக்குள்ளான முயற்சி தோல்வியுற்ற பின், மலையக மக்களின் பிரஜாவுரிமை பிரச்சனையை அரசியல் ரீதியாக கைவிட்டார். தேர்தல் கட்சி என்ற வகையில், வாக்குரிமையற்ற மலையக மக்கள் அரசியல் ரீதியாக பயனற்றவர்களானார்கள்;.
திருமுருகன் காந்தி திரிப்பது போல் வடக்கு-கிழக்கு மக்கள் தமிழ் காங்கிரஸ்;சை தோற்கடிக்கவில்லை. தொடர்ந்து அவர்களும் வெற்றி பெற்றுவந்தனர். மலையக மக்களின் கோரிக்கைகளை கைவிட்ட செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியும், ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ்;சும் 1965 இல் அரசில் மந்திரிப் பதவிகளைப் பெற்று, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கினர். குறிப்பாக 1960 இல் உருவான புதிய வர்க்கக் கட்சி வடக்கில் வெள்ளாளியத்தின் தீண்டாமைக் கூறுகளை எதிர்த்து போராடிய போது - அதை அரசில் இருந்தபடி ஒடுக்கினர்.
வர்க்க அரசியலை கைவிட்டுச் சீரழிந்த கம்யூனிஸ்ட்டுகள் - வாக்குரிமையற்ற மக்களை அரசியல் ரீதியாக கைவிட்டனர். வர்க்க ரீதியாக சீரழிநததை எதிர்த்து 1960 களில் உருவான புதிய கம்யூனிஸ்ட் கட்சி, மலையக மக்களுக்காக குரல் கொடுக்கத் தொடங்கியது.
இக் கட்சியின் தொழிற்சங்க இயக்கமான செங்கொடிச் சங்கம் 1965 ஆண்டில் 110,000 தொழிற்சங்க உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாக மாறுமளவுக்கு – ஒடுக்கப்பட்ட மலையக மக்களைப் பிரதிபலித்தது.
வர்க்க ரீதியாக மலையக மக்களின் அணிதிரள்வு, இலங்கைப் பொருளாதாரத்தை முடக்கிவிடும் என்ற சூழலில் தான், பிரஜாவுரிமை வழங்கும் வண்ணம் 1964 ஆம் ஆண்டு சிறிமா - சாஸ்திரி உடன்படிக்கை உருவானது. பின்னர் 1974 இல் சிறிமா - இந்திரா உடன்படிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இப்படி வரலாற்றில் பல பக்கங்கள் இருக்க, ஒடுக்கப்பட்ட மலையக மக்களுக்காக யாழப்;பாண வெள்ளாளியம் போராடியதாக மே 17 திருமுருகன் காந்தி - வெள்ளாளிய சங்கியாக மாறி வரலாற்றை திரிக்கின்றார். தமிழகத்தில் தமிழனைத் தமிழன் பெயரால் ஒடுக்கவும் - தமிழனின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கவும், ஈழத்து வெள்ளாளியத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமாக – அதை முன்னுதாரணமிக்க போராட்டமாக திரித்துப் புரட்டி முன்னிறுத்துகின்றனர்.
பின் இணைப்பு
1990 வரையான காலத்தில் - இயக்கங்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் நடத்திய போராட்டங்களில் சில ஆவணங்கள் - இவை தவிர நூற்றுக்கணக்கில்; ஆவணமாக எம்மால் தர முடியும்.
1.சமூக விரோத ஒழிப்பும் மக்கள் இயக்கத்தின் பங்கும் (பக்கம் 7)
http://padippakam.com/padippakam/document/NLFT/ilakku04.pdf
2.மக்கள் இயக்கத்திற்கு எதிரான போராட்டப் படங்கள் - பக்கம் 30
http://padippakam.com/padippakam/document/NLFT/ilakku06.pdf
3.விடுதலை இயக்கங்களின் அடாவடித்தனங்கள் பக்கம் 10
http://padippakam.com/padippakam/document/NLFT/ilakku07.pdf
4.நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா செல்லுங்கள்
http://padippakam.com/padippakam/document/general/Notes/1264.pdf
5.பயிற்சி முகாம்கள் அல்ல வதை முகாம்கள்
http://padippakam.com/padippakam/document/plot/againstplot/000001.pdf
6.புளட்டின் போலி முகத்திரையைக் கிழித்தெறிவோம்
http://padippakam.com/padippakam/document/plot/againstplot/againstplot01.pdf
7.எமது வெளியேற்றம் அராஜகத்துக்கு எதிரானதே தவிர விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானதல்ல
http://padippakam.com/padippakam/document/plot/againstplot/againstplot02.pdf
8.எமது இயக்கங்களின் குறைபாடுகளும் தவறுகளும்
http://padippakam.com/padippakam/document/general/Notes/1088.pdf
9.பொய்மைக்குள் வாழ மறுப்போம்!
http://padippakam.com/padippakam/document/general/Notes/1086.pdf
10.புலிகளின் தடுப்பு முகாம்கள்
http://padippakam.com/padippakam/document/general/Notes/1083.pdf
11.தமிழ் புலி(ளி)ப்படைகளின் தமிழ் இரத்தவெறி
http://padippakam.com/padippakam/document/general/Notes/1074.pdf
12.புலிகளின் வதைமுகாமில் கொல்லப்பட்டவர்களில் ஒருவன்
http://padippakam.com/padippakam/document/general/Notes/1072.pdf
13.பிரியமான விரோதிகளே
http://padippakam.com/padippakam/document/general/Notes/1071.pdf
14.மீண்டும் ஒரு அஞ்சலி
http://padippakam.com/padippakam/document/general/Notes/1055.pdf
15.பாசிசப் புலிகளின் வதை முகாம்
http://padippakam.com/padippakam/document/general/Notes/1038.pdf
16.முடிவு எப்போது ? (ஈழம்)
http://padippakam.com/padippakam/document/general/Notes/1026.pdf
17.தொடரும் கடத்தல்கள் .. (ஈழம்)
http://padippakam.com/padippakam/document/general/Notes/1025.pdf
18.இவர்களுமா துரோகிகள் (ஈழம்)
http://padippakam.com/padippakam/document/general/Notes/1024.pdf
19.புலி ஆதரவாளர்களின் நிலை???
http://padippakam.com/padippakam/document/general/Notes/1023.pdf
20.தமிழீழப் போராட்டத்தில் பின்னடைவு ஏன்? சிந்திப்போம்! செயலாற்றுவோம்!!
http://padippakam.com/padippakam/document/general/Notes/1022.pdf
21.புலிகளின் பேச்சில் முரண்பாடும் பதட்டமும்
http://padippakam.com/padippakam/document/general/Notes/1010.pdf
22.புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பகிரங்கக் கடிதம்
http://padippakam.com/padippakam/document/general/Notes/1111.pdf
23.மக்களே சிந்தியுங்கள் உண்மை நிலையினை புரிந்து கொள்ளுங்கள்
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/11.pdf
24.பல்கலைக்கழக மாணவர் பிரச்சார பாதயாத்திரை மேற்கொள்ள முடிவு
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/13.pdf
25.மாயைகளைக் களைந்து உண்மைகளை எதிர்கொள்வோம்
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/14.pdf
26.அராஜகங்களின் ஆணிவேரை அறுப்போம்
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/01.pdf
27.விலங்குடனா விடுதலை?
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/02.pdf
28.நாம் பேசவேண்டும்! எழுதவேண்டும்!! வாழ வேண்டும்!!
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/04.pdf
29.யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் எங்கே
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/03.pdf
30.தமிழீழ விடுதலைப் புலிகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/05.pdf
31.பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்து முன்னேறுவோம்
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/06.pdf
32.இந்தக் கல்லறைகள் பேசுவது அந்தக் கயவர்களுக்கு புரிவதேயில்லை
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/07.pdf
33.மாணவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த உத்தமன் விஜி எங்கே?
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/08.pdf
34.விடுதலைப்புலிகளின் ராக்கிங் வர்ணனையும் மாணவர்களின் நிலைப்பாடும்
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/09.pdf
35."விஜி" விடுதலையாகும்வரை போராட்டம் நடைபெறும்
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/12.pdf
36.யாழ்பாண பல்கலைக்கழக மாணவ தலைவன் த. விமலேஸ்வரன் புலிகளினால் கோரக் கொலை
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/0016.pdf
37.விமலேஸ்வரன் படுகொலை தொடர்பான சிங்களப் பிரசுரம்
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/0017.pdf
38.யாழ் பல்கலைக்கழக மாணவன் றயாகரன் விவகாரம்: "புலிகள்" விளக்கம்
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/0018.pdf
39.Student union condemns Vimaleswaran killing
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/0021.pdf
40.இன்று நடைபெறும் மாணவர் குழுவின் பொதுக்கூட்டம் (ஈழமுரசு 21.08.87)
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/0020.pdf
41.கலைப்பீட மாணவர் கவலை தெரிவித்து அறிக்கை (உதயன்)
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/0023.pdf
42.சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தவே றயாகரனை கைது செய்தோம் (ஈழமுரசு 22.08.87)
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/0025.pdf
43.இன விரோத சக்திகளை புலிகள் அனுமதிக்கமாட்டா
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/0028.pdf
44. 86ல் விஜிதரன் சுட்டுக்கொலை 87ல் ரஜாகரன் மயிரிழையில் உயிர் தப்பினார்! 88ல் விமலேஸ்வரன் .......
http://padippakam.com/padippakam/document/StudentRevolt/0032.pdf
45.றாகிங் என்பது பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு பண்பாட்டு அம்சமா?
http://padippakam.com/padippakam/document/general/Notes/1127.pdf
46.ஈழப்போராட்த்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டவர்கள் (அதிரடி இணையத்தில் வெளியானது)
http://padippakam.com/padippakam/document/Kild/Tamil/001_050.pdf
47.மின் கம்பத் தண்டனை
http://padippakam.com/padippakam/document/Kild/Tamil/kt0002.pdf
48.ரூபன் படுகொலை புலிகளின் வெறியாட்டம்
http://padippakam.com/padippakam/document/Kild/Tamil/kt0009.pdf
49.பாசிசப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு ஒரு சவால்
https://www.tamilcircle.net/document/puja/1991/01_1991_01.pdf
50.பாசிஸ்டுகளே சிந்தனையைச் சிறையிட முடியுமா?
https://www.tamilcircle.net/document/puja/1991/01_1991_02.pdf
51.விடுதலைப் புலிகள் : கேள்வி பதில்
https://www.tamilcircle.net/document/puja/1991/02_1991_01.pdf
52.விடுதலைப் புலிகளின் இழிசெயல்: ராஜீவ் கொலைக்கு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் மீது வீண்பழி
https://www.tamilcircle.net/document/puja/1991/07_1991_01.pdf
53.புலிகளின் பாசிசம்
https://www.tamilcircle.net/document/puja/1991/08_1991_02.pdf
54.பிரபாகரனும் - தமிழ் இனவாதக் குழுக்களும்
https://www.tamilcircle.net/document/puja/1990/02_1990_01.pdf
55.ஈழம் : கொலைகளுக்கு யார் பொறுப்பு
https://www.tamilcircle.net/document/puja/1990/03_1990_01.pdf
56.அதிர்ச்சி : போதை மருந்து கடத்தி இஸ்ரேலிடம் ராணுவ பயிற்சி!
https://www.tamilcircle.net/document/puja/1990/12_1990.pdf
57.ஈழம் : விடுதலைக்கு எதிராக புலிகளின் பாசிசப் போக்குகள்
https://www.tamilcircle.net/document/puja/1988/10_1988%20_1.pdf
58.தமிழீழ விடுதலைப் புலிகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு
https://www.tamilcircle.net/document/StudentRevolt/05.pdf
59.நாம் பேசவேண்டும்! எழுதவேண்டும்!! வாழ வேண்டும்!!
https://www.tamilcircle.net/document/StudentRevolt/04.pdf
60.பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்து முன்னேறுவோம்
https://www.tamilcircle.net/document/StudentRevolt/06.pdf
61.புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை
62.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)
63.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 02)
64.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 01)
65.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 02)
66.போலிகளை இனம் காண்போம்
http://padippakam.com/padippakam/document/telo/Publications/telo43.pdf
67.அராஜக கும்பல்களை வெளியேற்றுவோம்
http://padippakam.com/padippakam/document/telo/Publications/telo41.pdf