Language Selection

பி.இரயாகரன் -2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வெள்ளாளிய புலித் தேசியத்தை முன்னிறுத்தும் தமிழகத்து சங்கிகளும் (ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களையல்ல – ஓடுக்கும் தமிழனை), புலிப் பணத்தை தமதாக்கிய புலத்துப் புலிகளும், பிரிட்டிஸ் நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அளவுக்கு, ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு எந்த வித நன்மையுமில்லை.


மாறாக புலியைக் கொண்டாடுவதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான போராட்டங்களையே மறுப்பதுடன், தொடர்ந்து ஒடுக்கப்படும் மக்களின் ஒடுக்குமுறைகளை இனம் காணவிடாது திசைமாற்றி - பேரினவாத ஒடுக்குமுறைக்கு உதவுகின்றனர். புலியைக் கொண்டாடுவதன் பின்னுள்ள அரசியல் சாரம், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்கள் பேரினவாதத்தை எதிர்த்து சுதந்திரமாக போராடக் கூடாது என்பது தான். இதற்கு பதில் புலியை – புலி முன்வைத்த வெள்ளாளிய அரசியலைக் கொண்டாட வேண்டும்.

இந்தியா 1980களில் ஓடுக்கப்பட்ட தமிழ்மக்கள் பேரினவாதத்தை எதிர்த்து சுதந்திரமாக போராடக் கூடாது என்பதற்காகவே, ஆயுதப் பயிற்சி அளித்தது. அதே அரசியல் நோக்குடன் இன்று தமிழகத்து புலிச் சங்கிகள், இலங்கையில் தமிழ் மக்கள் சுதந்திரமாக போராடக் கூடாது என்பதற்காகவே புலியை முன்னிறுத்துகின்றனர்.

இப்படிப்பட்ட புலியின் தடைநீக்கம் என்பது, புலம்பெயர் நாடுகளில் சட்டரீதியாக தடைசெய்யப்பட்ட புலிச் சொத்தை அனுபவிக்க விரும்;பும் கூட்டத்தின் சொத்துப் போராட்டமே. இந்தப் போராட்டத்தை தமிழ் மக்களின் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி (மே 17 புலி சங்கியான திருமுருகன் காந்தி நக்கிPரனுக்கு வழங்கிய பேட்டி) என்று கூறுவதன் மூலம், தமிழகத்து வெள்ளாளிய சங்கிகளுக்கு பங்கு கிடைக்கலாம். இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ்மக்கள் பெறப்போவது எதுவுமில்லை.

புலியை ஆதரிப்பது என்பது, இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது. தமிழகத்து புலிச் சங்கிகள் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஆதரிப்பதில்லை, புலியை ஆதரிக்கின்றனர். இதனாலேயே பகுத்தறிவற்று, ஓடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முன்வைக்க முடியாத சங்கிகளாக இருக்கின்றனர்.

புலிகள் தடை செய்யப்பட முன்பும், 2009 முன் புலிகள் அதிகாரத்தில் இருந்த போதும், ஓடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள்? யாராவது எதையும் முன்வைக்க முடியாது. அதாவது எதுவுமில்லை. அழிவைத் தவிர, தமிழ்ச் சமூகம் எதையும் பெறவில்லை.

புலிகள் இருந்த வரை சிந்திக்கும் பகுத்தறிவையோ - ஜனநாயகத்தையே கட்டி எழுப்பவில்லை. அதை திட்டமிட்டு ஒடுக்கியதுடன் - அதன் சமூக அடித்தளத்தை அழித்து விட்டனர். ஆணாதிக்க சமூக அமைப்பை தகர்க்கவில்லை மாறாக இயக்கத்திற்கு ஆளெடுக்கவே பெண்களை முன்னிறுத்தினர். சாதியை தகர்த்;தெறியும் வெள்ளாளியத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்தவில்லை, மாறாக ஓடுக்கப்பட்ட சாதிகள் மேலான வெள்ளாளிய ஓடுக்குமுறைக்கு எதிரான Nhராட்டத்தை ஓடுக்கி - வெள்ளாளிய சாதிய சமூகக் கட்டமைப்பை மீறுவதை தேசியத்துக்கு எதிரான குற்றமாக்கினர். பிரதேசவாதத்தை எதிர்த்ததான போராட்டத்தை மறுத்து, மாறாக அதை மீறுவதை குற்றமாக்கினர். சுரண்டப்பட்ட வர்க்கங்களின் தேசியத்துக்கு பதில், சுரண்டும் வர்க்கத்தின் தேசியத்தையே முன்னிறுத்தினர்.

இப்படி தமிழனைத் தமிழன் ஓடுக்கும் அதிகாரத்தை முன்னிறுத்திய புலிகள், தங்கள் சொந்த அதிகாரத்துக்காகவே தமிழ் மக்களை இனரீதியாக சிதைக்கும் - இனவழிப்பு யுத்தத்தை நடத்தினர். இந்த அழிவுகார யுத்தத்தின் பின்னால் தமிழ் மக்களை ஒடுக்கும் தமிழ் சொத்துடைய கும்பல் ஒன்று கொழுத்துக் கொண்டு இருந்தது. அந்தக் கும்பல் வழிகாட்டிய யுத்த பாதையில் பயணித்த புலிகள், தங்களுக்கு தாங்களே சொந்தப் புதைகுழியை வெட்டி - அதில் புதைந்தனர்.

புலிச் சொத்தை ஆட்டையைப் போட்ட கூட்டம், அதில் ஒரு பகுதி தடைகள் மூலம் முடங்கிவிட்டதன் பின்னால், அந்தச் சொத்தை மீட்கும் போராட்டத்தையே – புலித் தடை நீக்கமாக முன்னிறுத்தி - அதை அரங்கேற்றி இருக்கின்றனர்.

தமிழ் மக்கள் எப்படி இன்று ஓடுக்கப்படுகின்றனர் என்று கூற முடியாத அளவுக்கு, அரசியல் ரீதியாக மக்களை அனாதையாக்கிய கூட்டம், பிழைப்பு சார்ந்த புலியை முன்னிறுத்துகின்றனர். புலிகள் இருந்த வரை யுத்தப் பிரதேசம் சார்ந்தும், மக்களை கேடயமாக பயன்படுத்தி யுத்தம் செய்தனர். புலிகளின் இந்த யுத்த தந்திரத்தில் மக்கள் செத்து மடிந்தனர். இந்தப் பிணத்தைக் காட்டி, இது தான் தமிழ்மக்கள் மீதான ஓடுக்குமுறை என்று கூறி அரசியல் செய்தனர்.

புலிகள் இல்லாமல் இருந்திருந்தால் மக்கள் முழுமையாக கொல்லப்பட்டு இருப்பார்கள் என்ற பொது அச்சத்தை விதைத்து, புலிகளின் இராணுவ அரசியல் கட்டமைக்கப்பட்டது.

2009 இல் புலிகளின் அழிவின் பின், மக்களைக் கூட்டம் கூட்டமாக அரச இராணுவம் கொல்வது நிகழவில்லை. மாறுபட்ட இந்த அரசியல் சூழலில், தமிழ் மக்கள் எப்படி ஓடுக்கப்படுகின்றனர்? இன்று இதை அடையாளப்படுத்தி கூற முடியாத சமூகமாக தமிழ் சமூகம் மாறிவிட்டது. இன்று எங்கே சாதி இருக்கின்றது?, எங்கே சாதி ஒடுக்குமுறை இருக்கின்றது? என்று வெள்ளாளியம் எப்படிக் கேட்கின்றதோ, அப்படி இனவொடுக்குமுறை எப்படி, எந்த வடிவில் இருக்கின்றது என்பதை கூறமுடியாத அளவுக்கு, சமூகத்தின் சிந்திக்கும் - பகுத்தறியும் அறிவை புலிகள் ஒடுக்கி - அதை அழித்து விட்டனர். புலிச் சங்கிகள் முன்வைக்கும் தேசியம் என்பது, புலியை முன்னிறுத்துவதே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றனர் என்பதை முன்வைப்பதில்லை. இப்படி புலிச் சங்கிகளுக்கும் – அதன் அரசியல் நடத்தைக்கும் அரசியல் பொழிப்புரை மூலம் இட்டுக்கட்டியும் - திரித்தும் அரசியல் முலாம் பூசும், மே 17 புலிச் சங்கியான திருமுருகன் காந்தி நக்கீரனுக்கு வழங்கிய பேட்டி - அச்சொட்டாக தமிழ்மக்களை சொல்லிப் பிழைக்கும் - ஒடுக்கும் வெள்ளாளியத்தையே பிரதிபலிக்கின்றது.

பழைய யுத்த வடுக்களை மட்டுமே ஒடுக்குமுறையாக முன்னிறுத்கும் புலிச் சங்கிகள், ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியத்தை அடையாளம் காணவும் - காட்டவும் முடியாத அளவுக்கு - சமூகத்தில் இருந்து புலிச் சங்கிக் கும்பல் அன்னியமாகி கிடக்கின்றது. தொடர்ந்து இன –வர்க்க ரீதியாக ஒடுக்கப்படும் மக்கள், தங்கள் மேலான ஓடுக்குமுறையை இனம் காணவும் - போராடவும் முடியாத வண்ணம் - புலி முன்னிறுத்தப்படுகின்றது. சங்கிகள் புலியை முன்னிறுத்துவதன் நோக்கம், பேரினவாத ஒடுக்குமுறைக்கு மறைமுகமாக உதவுவதே.