தமிழ்மக்களுக்கு சவக்குழியைத் தோண்டும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
சுவாஸ்திகாவின் கருத்துரிமையை மறுத்து கருத்துரைக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் விஜகுமாரிடம், ஊடகவியலாளர் பிரஸ்ரெவ் கேட்ட கேள்வியும் - முன்வைத்த பதிலும், தேசிய இனத்தின் அழிவுக்கு எப்படி சவக்குழி தோண்டப்படுகின்றது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
புலியிசத்தின் பின்னால் பதுங்கி நிற்கும் தங்களது ஜனநாயக மறுப்பு வன்முறை வடிவத்தை, தமிழ் சமூகத்தின் மீட்சிக்கு உதவுமென்று நம்புகின்ற - நம்ப வைக்கின்ற கிணற்றுத் தவளைகளாக தம்மை முன்னிறுத்திக் கொள்கின்றனர்.
முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாக மக்களை பலியெடுத்தவர்களுக்கு திட்டமிட்டே பலிகொடுத்தவர்களின் வாரிசுகளே இவர்கள். எஞ்சி வாழும் மக்களுக்கு சொந்த சவக்குழியைத் தோண்டி வருகின்றனர். ஒரு தேசிய இனத்தின் எல்லாவிதமான சமூக இருத்தலையும், இல்லாதாக்குகின்ற வக்கிரமான லும்பன்தனமான பொறுக்கி அரசியலே - தமிழ் தேசியத்தின் பேரில் அரங்கேறுகின்றது.