"குடும்ப வரையறைக்குள் தான் ஆண் பெண் உறவு.." இருக்க முடியுமா?
"குடும்ப வரையறைக்குள் தான் ஆண் பெண் உறவு இருக்க வேண்டும்" என்று நான் (இரயாகரன்) சொன்னதாக, கற்பனையில் "பெண்ணியம்" பேசும் சில பெண்கள் கதையளக்கின்றனர். எனது விமர்சனம் இதற்கு எதிராக "நிலவும் ஆணாதிக்க குடும்ப அமைப்பையே கேள்விக்குள்ளாக்கும் போது", தன்னோடு பாலியல் உறவில் பெண்கள் இருந்ததாக மயூரனாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட "பெண்ணிய" கண்ணோட்டத்தையும் கேள்விக்குள்ளாக்கி விமர்சிக்கின்றது.
இப்படி இருக்க "குடும்ப வரையறைக்குள் தான் ஓர் ஆண் பெண் உறவு இருக்க வேண்டும் என்று நீங்கள் (இரயாகரன்) கூறுவதே மிகப்பெரிய தவறு" என்று நான் சொல்லாத ஒன்றைச் சொல்லி கருத்தை திரிப்பதன் மூலம், "பெண்ணியத்தின்" பெயரில் மயூரனும் - இதில் சம்மந்தமாக்கப்படும் பெண்களின் பாலியல் உறவு முறையை மறைமுகமாக ஆதரிக்க முற்படுகின்றார்.
இதற்கு "லைக்குகள்" போட்டு எழுதும் "பெண்ணியல்வாதிகள்", எதை வைத்து எதற்கு லைக்குகளை போடுகின்றனர்?!
எனது விமர்சனத்தில் "குடும்பம் என்ற ஆணாதிக்க அமைப்புமுறையில் பாலியல் எப்படி நோக்கப்படுகின்றதோ, அதேபோன்றதே. பெண் பாலியலுக்கு இணங்கிவிட்டால், ஆண் பெண் நடத்தையில் கேள்விக்கு இடமில்லை. அதை சமூக நோக்கில் கூட கேள்வி கேட்கக் கூடாது. இது தான் "முற்போக்கு பெண்ணியம்" என்று கூறுமளவுக்கு நடைமுறையற்ற அரசியலும் இலக்கியமும் சீரழிந்து இருக்கின்றது" என்று கூறி, நிலவும் ஆணாதிக்க குடும்ப அமைப்பையும் சேர்த்து விமர்சித்து இருக்கின்றேன்.