அருண் சித்தார்த்தை இலக்குவைத்த புலித் தற்குறிகள்
கடந்த காலம் முதல் நிகழ்காலம் வரையான, யாழ் வெள்ளாளிய சமூகத்தை விமர்சிப்பது தற்குறிகளுக்கு அச்சமூட்டுவதாக மாறியிருக்கின்றது. சுயமாகச் சிந்திக்கவும், பகுத்தறிவுபூர்வமாக விவாதிக்கவும், தர்க்கிக்கவும் அறிவும், நேர்மையும், சமூக அக்கறையும் வேண்டும்.
ஜனநாயகம் குறித்தும், சுதந்திரம் குறித்தும் தெளிவும், அதற்கான சமூகப்பண்பும் மனிதநாகரீகமும் வேண்டும். தமிழினவாதம் முன்வைக்கும் வெள்ளாளியத் தமிழனுக்கு இவை கிடையாது.
புலியால், தமிழினவாதத்தால், சாதியால், மதவாதத்தால் .. உருவேற்றப்பட்ட வன்முறையையே, மாற்றுக்கருத்துக்குத் தீர்வாகக் கருதும் தற்குறிகளுக்கு, மனிதத்தன்மை கடுகளவும் இருப்பதில்லை. மாறாக மனித வெறுப்புக்கொண்டு, பாசிசமே அதன் குணாம்சமாக வெளிப்படும். பொதுவாக பணத்துக்காகக் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமே, தமிழினவாதத்தை, புலியிசத்தை முன்வைத்துக் கூச்சலிடுகின்றது.
இந்தக் கூட்டமே அண்மைக்காலமாக அருண்சித்தார்த்தை இலக்குவைத்துத் தொடர் மிரட்டல்களை விடுத்தவர்கள், இன்று நேடியான வன்முறைக்குள் இறங்கியுள்ளனர். அருண்சித்தார்த் வீடு - அலுவலகம் மீது தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைச் செயலைத் தூண்டியவர்களும், இதில்; ஈடுபட்டவர்களும்.. புலிப் பாசிச தேசியத்தால் தற்குறியாக்கப்பட்ட லும்பன்களே.
