கொலன்னாவ - மீதொட்டமுல்ல பகுதியில், குப்பைக் கழிவுகளைக் கொட்டுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி போராடிய மக்கள் மீது நல்லாட்சி அரசு தனது அரச படைகளை ஏவி விட்டு தாக்குதல் தொடுத்துள்ளது. இக் குப்பை மேடுகள்  அருகில் உள்ள வீடுகளில் சரிந்து விழுவதாகவும், அப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீசுவதாகவும் மற்றும் சுகாதார சீர்கேடுகளும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
வன்முறை - சூறையாடல் வித்தியாவை மட்டும் சூறையாடவில்லை, வித்தியாவின் பெயரால் மக்களின் போராட்டத்தையும் - பெண்களின் குரலையும் கூட சூறையாடி இருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் பேரினவாதம் எதை மக்களுக்கு எதிராக அரங்கேற்றியதோ, அதைப் போன்ற ஒன்றையே சிலரால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதன் மூலம் சமூகத்தை உறைநிலைக்கு தள்ளி இருக்கின்றது. மீண்டும் பாதுகாப்பு படைகளை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது.
 
இலங்கையில் பெண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற பாலியல் வன்முறைகளுக்கு எதிராக இன- மத பேதங்களை கடந்து சகல பெண்களையும், ஆண்களையும் போராட அறைகூவல் விடுத்து இன்று கொழும்பு கோட்டை புகையிர நிலையத்தின் முன்னால் விழிப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது.
 
உலகின் எந்த மூலையிலும் சிறுமிகள், யுவதிகள், முதியவர்கள் என்ற பேதமின்றி பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வாறான துன்புறுத்தல்கள் இலங்கை சமூகத்திலும் மூலை முடுக்கெல்லாம் பரவலாகிக் கொண்டிருக்கின்றன. அது இன, மத, சாதிய வேறுபாடின்றி தெவுந்தர முனையிலிருந்து பருத்தித்துறை முனை வரையிலும், பருத்தித்துறையிலிருந்து தெவுந்தர முனை வரையிலும் பரவலாகிக் கொண்டிருக்கிறது.