உலக மேலாதிக்க அமெரிக்க ஏகாதிபத்திய யுத்தம்
உலக மூலதனத்துடன் சுதந்திரமாகப் போட்டி போடமுடியாத அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனமானது, அனைத்துவிதமான மனிதவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.
1. உலக நாடுகள் மீது யுத்தங்களை நடத்துகின்றது.
2. புதிய வரிகளைத் திணிக்கின்றது.
3. நாடுகள் மீதான பொருளாதாரத் தடைகளைப் போடுகின்றது
4. ஆட்சிகளை மிரட்டி அடிபணிய வைக்கின்றது.
5. சதிகள் மூலம் ஆட்சிகளைக் கவிழ்க்கின்றது,
6. சுதந்திரமான நாடுகளைத் தன்னுடன் இணைக்குமாறு மிரட்டுகின்றது.
7. தேர்தல்களில் தலையிடுவதன் மூலம், பொம்மை ஆட்சிகளைத் தேர்ந்தெடுக்கின்றது.
8. தலைவர்களைக் கொல்லுகின்றது.
9. உள்நாட்டு கலவரங்களைத் தூண்டி விடுகின்றது.
10. அமெரிக்காவுக்குச் சார்பான கருத்தை உருவாக்க நிதிகளை வாரி இறைக்கின்றது.
11. தேர்தல் ஜனநாயகத்தைப் போலியாக்கி விடுகின்றது.
12. ஊடகச் சுதந்திரத்தை விபச்சாரமாக்கி விடுகின்றது.
13. இன, மத, நிற.. மோதல்களைத் தூண்டி விடுகின்றது.
இப்படி எண்ணற்ற சதிகளை, அவதூறுகளை, குற்றங்களை.. செய்வதே அமெரிக்காவின் போலி ஜனநாயகம். உலகநாடுகளின் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும், சுயாதீனத்தையும்.. மறுதளிக்கும் அமெரிக்கா, அரசியல் சமூகப் பொருளாதாரத்தை தன் காலடியில் மண்டியிட வைக்கின்றது. மனித உழைப்பைச் சுரண்டுவது எப்படி ஜனநாயகமானதோ, அப்படி அமெரிக்காவுக்கு மந்தைகளாக இருப்பதையும், சுதந்திரமாக மேய்வதையும், மனிதனின் சுதந்திரம் - ஜனநாயகம் என்கின்றனர்.
