16
Sun, Jun

நம் நாட்டில் உள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளில் க.பொ.த. உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவி வருகிறது. 30 வருட காலம் வடகிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்தம் இதற்கு முக்கிய காரணம். இப்பிரச்சினைக்கு தீர்வாக ஓய்வு பெற்ற கணித விஞ்ஞான ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. எனினும் இதுவரையில் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந் நிலையில் குறித்த ஆசிரிய வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்காது.  பிரச்சினையை மேலும் உக்கிரமடைய செய்யும் நடவடிக்கையாகும். இப் பிரச்சினைக்கு நடைமுறை சாத்தியமான விஞ்ஞானபூர்வமான தீர்வுகளை முன்வைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்காமை வருந்த தக்கது. இவ்வாறு இந்திய ஆசிரியர்கள் வரவழைக்கப்படுவதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளமை தொடர்பாக மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுள்ளார். 

Read more: %s

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமைக்கு ஆட்சியாளர்களின் அலட்சியப்போக்கும், அவர்களது சகாக்களின் லாப நோக்கமுமே  பிரதான காரணங்களாகும். கண்ணெதிரே இருந்த ஆபத்தை தடுக்க முன்வராத ஆட்சியாளர்களை மனித கொலைகாரர்கள் என்றே கூற வேண்டும் என மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கெதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சட்டத்தரணி நுவான் போபகே ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரிகைள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு ராணுவம் வழங்கிய நிவாரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. 

இந்த அனர்த்தத்தில் இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதனை சரியாக கூற முடியாதுள்ளது. வெளியிடங்களில் இருந்து உறவினர் வீடுகளிற்கு வந்தவர்கள் கூட குப்பை மேட்டு சரிவிற்குள் சிக்கியிருக்க கூடும். இவர்கள் 40 அடிகளிற்கு கீழ் புதையுண்டு இருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது.

Read more: %s

நேற்று காலை (01) 10.00 மணிக்கு முன்னிலை சோசலிச கட்சியின் 2வது தேசிய மாநாட்டின் கட்சி உறுப்பினர்களிற்க்கான அமர்வு கொழும்பு சுகதாச விளையாட்டரங்கின் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது.

2வது மாநாட்டின் மையப்பொருள் "நவ தாராளமய திட்டத்திற்கு எதிரான சோசலிசத்திற்க்காக... வர்க்கத்திற்கொரு கட்சி" ஆக அமைந்திருந்தது. இந்நிகழ்வானது கட்சியின் பொது செயலாளர் சேனாதீர குணதிலக, அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினம் தலைமையில்; மாநாட்டு செயலாளர்கள் புபுது ஜயகொட, சமீர கொஸ்வத்த மற்றும் ஜூட் சில்வா புள்ளே வழிகாட்டலில் இடம்பெற்றது.

Read more: %s

கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்டடோர்கள் மற்றும் அரசியல் கொலைகளிற்கு உள்ளானோர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுமாறும், அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரி  05-01-2017 அன்று ஜனநாயகத்துக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர்  சந்திப்பினை நடாத்தியுள்ளனர். இதில் இடதுசாரிய கட்சிகளான முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனீனிச கட்சி, ஐக்கிய சோஷலிஸக் கட்சி, இலங்கை சோஷலிஸக் கட்சி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் இவர்களுடன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலார் பிரகீத் எகலியகொட அவர்களின் மனைவியும் கலந்து கொண்டார்.

Read more: %s

அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட 15000 ஏக்கர் காணி விற்கப்படுவதற்கும், துறைமுகத்தை தனியார்மயப்படுத்துவதற்கும் எதிராகவும், தமது தொழில் பாதுகாப்பு ஒழிக்கப்படுவதற்கு எதிராகவும் துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் வேலைக்கு திரும்பாது தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் ஆயின் இன்று 15ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு முன்னர் வேலைக்கு திரும்பி பணியை தொடராவிடின், தொழிலை இழந்தவர்களாகக் கருதப்படுவர் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இன்று நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.துறைமுக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு அறிவித்துள்ள ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம், இன்று எட்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு ஏழு நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

Read more: %s

More Articles …