16
Sun, Jun

தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் மட்டும் வாழ மனிதர்களை நிர்ப்பந்திக்கும் தனியுடமை உலகில் தன் சக மனிதர்களிற்காக வாழுதல், சமுதாயத்திற்காக போராடுதல் என்ற கல் நிறைந்த பாதையில் கால் வலிக்க நடந்த போதும் களைக்காமல் பொதுவுடமை என்னும் போர்க்கொடியை தூக்கிப் பிடித்தவன் எங்கள் தோழன் எம்.சி.லோகநாதன். அந்த போராட்டக் குணமே அவனை எமது புதிய ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைய வைத்தது. அந்த போராட்டக் குணமே அவனை எமது தோழன் ஆக்கியது.

Read more: %s

கடந்த வருடம் 2015 மாசி மாதம் குமார் குணரத்தினம் அவர்கள் தனக்கும், தன்னை போன்று அரசியல் காரணங்களிற்க்காக உயிராபத்தை எதிர்நோக்கி நாட்டை விட்டு வெளியேறிய அனைவருக்கும் மீள குடியுரிமை வழங்க வேண்டியதற்க்கான காரணங்களை முன்வைத்து வெளியிட்ட ஊடக அறிக்கையினை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்.

Read more: %s

மற்றொரு நாட்டின் பிரஜாவுரிமையைக் காரணம் காட்டி, இலங்கையில் பிறந்த ஒருவரின் பிரஜாவுரிமையை மறுக்கின்றதான மனிதவுரிமை மீறலில் அரசு ஈடுபடுகின்றது. பிறந்த மண்ணின் மீதான பிரஜாவுரிமையை மறுப்பது, அடிப்படை மனிதவுரிமை மீதான மீறலாகும். இதற்கு எதிரான போராட்டமே தோழர் குமார் குணரத்தினத்தை நாடு கடத்துவதற்கு எதிரான போராட்டமாகும். இது புலம்பெயர்ந்ததனால் இலங்கை பிரஜாவுரிமை மறுக்கப்படும் அனைவருக்குமான போராட்டமும் கூட. இலங்கை அரசின் தொடர்ச்சியான பல்வேறு மனிதவுரிமை மீறல்களில் இதுவுமொன்று. 1948 இல் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்து, இலட்சக்கணக்கில் நாட்டை விட்டு துரத்திய வரலாற்றில் மற்றொரு அத்தியாயம். இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டம் காலத்துக்குக் காலம் திருத்தப்பட்ட போது, பிறந்த மண்ணின் மீதான பிறப்புரிமையை மறுப்பதாக நீடிக்கின்றது. சர்வதேச மனிதவுரிமை கொள்கைகளுக்கும், அதன் பொதுநடைமுறைக்கும் விரோதமானதே இலங்கையின் பிரஜாவுரிமைச் சட்டம்.

Read more: %s

நாம், கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பலவகைப்பட்ட ஜனநாயக விரோத செயற்பாடுகள் காரணமாக அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்ட சமூகமாக உள்ளோம். காணாமலாக்கல், கடத்திச் செல்லல், கொலை செய்தல், பொலிஸ் தடுப்புக் காவலில் இருக்கும்போது கொலை செய்தல், வெள்ளை வேன் கோஷ்டியினால் கடத்தப்படுதல், வடக்கில் இராணுவ ஆட்சியை தொடர்தல், வேலைநிறுத்தங்களை அடக்குமுறை செய்வதற்கு உத்தரவிடுதல், நாட்டின் சிவில் பிரச்சினைகளில் இராணுவம் தலையிடுதல், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இராணுவப் பயிற்சி வழங்குதல், பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொண்ட அடக்குமுறைகள், ஆர்ப்பாட்டங்களின் மீது தாக்குதல் மற்றும் வெடிவைத்தல் போன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான சம்பவங்கள் மலிந்திருந்தன.

Read more: %s

ஜரோப்பிய ஒன்றியத்தினால் கிரேக்கத்திற்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியின் ஒரு பகுதியான 1.7 பில்லியன் யூரோ நாணயங்களை மீள கையளிக்க விதிக்கப்பட்ட காலக்கேடு இன்றுடன் முடிவுக்கு வருகின்றது. கடந்த இரு வாரங்களாக ஜரோப்பிய ஒன்றியத் தலைவர்களிற்கும் கிரேக்க அரசுக்கும் இடையே நடந்த கடனுக்கான வட்டியினை திருப்பி கையளிப்பதற்க்கான பேச்சு வார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இன்றி இறுக்க நிலையினை அடைந்துள்ளன.

Read more: %s

சென்ற இதழ் தொடர்ச்சி...

புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்தை அடுத்து, 1966ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் திகதி சாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஒங்கட்டும் என்ற கோஷத்துடன் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து ஆரம்பமாகிய சட்டவிரோத ஊர்வலம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை தாண்டும் பொழுது, வடபகுதி பொலிஸ் நிலையங்களில் இருந்து திரட்டப்பட்ட பொலிஸார் ஊர்வலத்தினர் மீதாக பலமான தாக்குதல் நடாத்தினர்.

Read more: %s

சாதி இப்ப இல்லை. சாதி ஒழிந்துவிட்டது. இப்ப ஆர் சாதி பாக்கினம். சாதியை சொல்லி சொல்லி பிழைக்கினம். அதனைப் பற்றி ஏன் கதைக்கவேணும். பேசாமல் விட்டாலே அது மறைந்துவிடும். இப்படியாக எங்கள் மத்தியில் உரையாடல்கள் இடம்பெற்று வருகிறது. இதனையொட்டி போட்டிக்குப் போட்டி பேட்டிகளும் இதழ்களில், தளங்களில், ஊடகங்களில் ஊற்றெடுத்துப் பாய்கின்றன. அரங்குகளில் கருத்துப் பொறிகள் பறக்கின்றன. சாதி இருக்கு என்போரும், இல்லை என்போரும் வரிந்து கட்டிக்கொண்டு மேடைக்கு மேடை தாவுகிறார்கள். இதுதான் தமிழர்களுக்கு உரித்தான தனிச் சிறப்பு. தமிழர்களின் தனித்துவ அடையாளம்.

Read more: %s

போராட்டம் ஏப்பிரல் மாத பத்திரிக்கை வெளிவந்து விட்டது. இந்த பத்திரிக்கையில்.....

1. இலங்கை மக்களை பலியிடும் ஒப்பந்தத்தில் மைத்திரி ஒப்பம்!

Read more: %s