16
Sun, Jun

கடந்த ஆட்சியில், அரசியல் காரணங்களால் உயிராபத்தை எதிர்நோக்கி நாட்டை விட்டு வெளியேறிய அனைவரும் மீள வந்து செயற்படுவதனை உறுதி செய்வதே, தமது முக்கிய பணிகளில் ஒன்று என வாக்குறுதி அளித்தே மைத்ரி -ரணில் அரசு பதவிக்கு வந்தது. அத்துடன் மகிந்தா நாட்டு மக்களிற்கு மறுத்த ஜனநாயகத்தை மீள உறுதி செய்வதும் தனது முக்கிய பணி எனவும் உறுதி அளித்திருந்தது.

ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் தேர்தலை வெல்வதற்காக வழங்கப்பட்ட பொய்கள் என்பது உறுதியாகியுள்ளது. இந்நாட்டில் ஊழல் பேர்வழிகள், கொலைகாரர்கள், நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள், உலகப்பயங்கரவாதிகள், சர்வதேசக் காவற்துறையான இன்ரபோலினால் தேடப்படுபவர்கள் என அனைத்து கிரிமினல்களும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள்.

தனது பிரஜாவுரிமையை மீளக் கோரியதற்காகவும், அரசியல் செய்யும் உரிமையினை உத்தரவாதப்படுத்துமாறு கோரியதற்காகவும், இலங்கைப் பிரஜை குமார் குணரத்தினத்திற்கு ஓராண்டு கால சிறைத்தண்டனையையும், 50,000 ரூபா அபராதமும் விதித்து இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் நீதிமன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது. மேற்படி அரசியற் பழிவாங்கலுக்கு ஆளாக்கப்பட்ட தோழர். குமார் குணரத்தினம், தீர்ப்பு வழங்கபட முன்பு, 24. பங்குனி 2016 அன்று கேகாலை நீதி மன்றத்தில் வழங்கிய சாட்சிய உரை:

Read more: %s

உலக வரலாற்றில் இதுவரை இலங்கை முதலாவது இடத்தைப் பெற்றிருப்பது ஒரேயொரு விடயத்தில் மட்டுமே. அது உலகில் முதலாவது பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு என்பதே ஆகும். 21 யூலை 1960ம் ஆண்டு சிறிமாவோ ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்க அவர்கள் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்று இப்போது 56 வருடங்களாகின்றன.

அவர் மூன்று தடவைகள் (1960-1970-1994) பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது மகள் திருமதி சந்திரிகா குமாரதுங்க இலங்கையில் மேல் மாகாண முதலாவது பெண் முதலமைச்சராகவும் (1993) இலங்கையின் பிரதமராகவும் (1994) பின்னர் இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதியாகவும் (1994) அடுத்தடுத்து இரு தடவைகள் நாட்டின் ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

Read more: %s

இலங்கையில் இன்று தினமும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் பாதிக்கப்படும் குடிமக்கள் ஒன்று கூடி நின்று தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக கண்டன ஆர்ப்பாட்டம் - கவனயீர்ப்புப் போராட்டம் - மனுக் கொடுக்கும் ஊர்வலம் - மறியல் போராட்டம் - உண்ணாவிரப் போராட்டம் என்ற வடிவங்களில் செயற்பட்டு வருகின்றனர்.

2009ல் யுத்தத்தில் வெற்றி கொண்டவர்களின் அடக்குமுறை நடவடிக்கைகள் நாடு பூராவும் பரவியிருந்தது. தோற்கடிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பரிகாசம் செய்யப்பட்டு பலவித துன்புறுத்தல்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்தனர். சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டன.

Read more: %s

மக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான போராட்டம் பத்திரிகை சித்திரை – வைகாசி பதிப்பு வெளிவந்து விட்டது.

இந்த இதழின் உள்ளே....

1. நான் முகம் கொடுக்கும் இப்பிரச்சனை இந்த நாட்டின் சமூக வாழ்வினதும் ஜனநாயகத்தினுடையதுமான பிரச்சனை - குமார் குணரத்தினத்தின் நீதிமன்ற உரை

2. அடிமையானாலும் இந்திய எசமானர்களின் அடிமையாவோம் - அய்யா சம்பந்தன்

3. தோழர்.குமாரை விடுவிக்கக் கோரும் சர்வதேச சகோதரக் கட்சிகள் (செய்தி)

4.  இலங்கைக் குடிமக்கள் இலவு காத்த கிளிகளா?

5. குடிமக்கள் சிந்தனையும், இலங்கையின் இனப் பிரச்சனையும்

Read more: %s