16
Sun, Jun

மக்கள் போராட்டங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிறிலங்காவில் SAITM எனும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை மூடக் கோரி நடந்த போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. இலவசக் கல்வியையும்,இலவச சுகாதார சேவையை பாதுகாக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இப்போராட்டம் நடைபெற்றது.

 

முன்னிலை சோசலிசக் கட்சியின் வழிகாட்டலில் "அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்" முன்னெடுத்த இப்போராட்டம் இலவசக் கல்வியைப் பாதுகாக்க உலகெங்கும் போராடும் மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரி ஆகும்.

 

சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர் அச்சுறுத்தல்,அடக்குமுறை,வெள்ளை வேன் கடத்தல் முயற்சிகள் என இப்போராட்டத்தை ஒடுக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் மாணவர்கள் முறியடித்தனர்.

 

"சயிட்டத்திற்கு எதிரான மாணவர் மக்கள் இயக்கம்" எனும் வெகு மக்கள் அமைப்பின் தோற்றம் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. மாணவர்களுக்காக அவர்களின் பெற்றோரையும் போராட்டக்களத்திற்கு கொண்டு வந்தது.சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் பெற்றோர்கள் ஈடுபட்டதால் அரசுக்கு அழுத்தம் கூடுதலாகியது.

தற்போது அரசு சயிட்டம் திட்டத்தை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது.அரசு தனது வாக்குறுதியில் இருந்து தவறினால்,மீண்டும் போராட்டம் தொடங்கும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

முதலாளித்துவ - புதிய தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியான இத்திட்டத்தை முறியடித்த மாணவர்களை வாழ்த்துவோம்.

 

மாணவர்களுக்கு அரசியல் வழிகாட்டல் வழங்கி அவர்களுக்கு அரணாக இருக்கும் முன்னிலை சோசலிசக் கட்சிக்கும் எமது வாழ்த்துக்கள்.

 

(மாணவர் இளைஞர் சமூக இயக்கம்)
-SYSM-Students Youth Social Movement