Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

உலக சனத்தொகையில் 5 சதவீதம் பேர் அடிமைகளாக வாழ்கின்றனராம்!

‘வாக் பிறீ’ என்ற அடிமைகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாய உழைப்பு, கடன் பெற்றவர்களின் உழைப்பு, பணத்திற்காக மனிதனை விற்பது,  கட்டாயத் திருமணம் .. சார்ந்து 3 கோடி பேர் அடிமைகளாக வாழ்வதாக தெரிவித்துள்ளது.

"ஜனநாயகம் - சுதந்திர" உலகம் பற்றி பீற்றிக் கொள்ளும் முதலாளித்துவ அமைப்பில், மக்கள் உழைப்பு வாழ்ங்கும் முறை சார்ந்த அடிமைகளாகவும், பொருட்களின் அடிமைகளாகவும் வாழ்கின்றனர். உழைப்பை சுரண்டும் அடிமை முறைக்குள் தங்கள் உழைப்பையும், உடலையும் சுதந்திரமாக விற்க முடியாதவர்கள் தான், இந்த 3 கோடி மனிதர்கள். அதாவது அதை பிறர் தீர்மானிக்கின்றனர். மற்றவர்கள் இந்த அமைப்பு முறையின் இணைங்கி போராடியும் வாழ்கின்ற சுதந்திரமான அடிமைகள். 

சொத்துடைமை தனிப்பட்ட சொத்தாக உள்ள அமைப்பில், அதைப் பெறுவதற்காக அந்த முறையுடன் இணைங்கி அதற்காக உழைத்து வாழும் முறையே சுதந்திரமான அடிமைத்தனமாக இருக்கின்றது.றான்;.

உழைத்து வாழும் எல்லா மனிதர்க்களையும் தன் அடிமையாகவே தனிச்சொத்துடமை  நடத்துகின்றது. இதற்கு எதிராக மனிதர்களின் கூடி போராடி வாழும் வாழ்கை தான், அடிமைத்தனத்தின் அளவையும் பண்பையும் வேறுபடுத்துகின்றது

இந்த சுதந்திர தனிச்சொத்துடமை அமைப்பில், உடலையும் உழைப்பையும் தங்களாக உழைப்புச் சந்தையில் விற்க முடியாதவர்களே இந்த 3 கோடி பேர்.