Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் மொழி பேசும் மக்களை பிரிக்கும் மத-சாதிவாதியே விக்னேஸ்வரன்

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யூ.சி.எல்) நிறுவனர்களில் ஒருவரான கே.ஜி.கண்ணபிரான் நினைவுச் சொற்பொழிவு 9-ம் தேதி சென்னை தி.நகர் வித்யோதயா பள்ளி அரங்கில் நடைபெற்றது. அதில்  "குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரஹ குரு சாட்சாத் பரப்ரம்மாஹ் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ...' என்று கூறி முதலாமைச்சார் விக்னேஸ்வரன் பேச்சைத் தொடங்கினார்.

இலங்கையில் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் எந்தனையோ வழிபாட்டு முறைகளையும்,  பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் கொண்ட வித்தியாசமானவர்கள். அரசும் அதை ஆளுகின்றவர்களும் இதைக் கடந்து தங்களை மனிதனாக வெளிபடுத்தாத வரை அவை அனைத்தும் மக்கள் விரோதமானவை.

தங்கள் குறுகிய அடையாளங்கள் மூலம் மதம், சாதி, பிரதேசம்.. வேறுபாடுகளை வளர்க்கின்ற குறுகிய சாதி மத சுலோகங்கள் இவை. சாரம்சத்தில்  யாழ் மேலாதிக்கமாகவும் இருக்கின்றது. வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்னையில் இதை வெளிபடுத்தியதன் மூலம், தங்கள் சாதி மத வர்க்க மேலாதிக்கத்தை பிரகடனம் செய்துள்ளதுடன் தங்கள் மேலாதிக்க நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.