Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

குமார் குணரத்தினம் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரத்தினம் கேகாலையில் வைத்து அண்மையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இன்றைய தினம் (18) அவரது வழக்கு கேகாலை நீரிமன்றில் விசாரணைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது குமார் குணரத்தினம் சார்பாக  ஆஜரான சட்டத்தரணிகள் குழுவில் நுவான் போபகே, உதுல் பிரேமசந்திர, அஜித் குமார ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி எதிர்வரும் 27ம் திகதி வரை குணரத்னத்தை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். குமார் குணரத்தினத்தை நாடு கடத்துவதற்க்கான நீதிமன்ற ஆணையினை, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் பெறமுடியாமல் போய் விட்டமையே காரணம் என அறியப்படுகின்றது. தோழர் குமாரின் பிரஜா உரிமை மற்றும் அரசியல் செய்யும் உரிமைக்கான போராட்டங்கள் தொடரும்!