Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

“டேவிட் ஐயா” நினைவு நிகழ்வு (படங்கள்)

காந்திய இயக்கத்தின் தாபகரும் நீண்டகாலப் போராளியுமான  டேவிட் ஐயாவின் நினைவு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (15.11.15) கனடாவில் ரொறன்ரோ நண்பர்களால் நடாத்தப்பட்டது. அன் நிகழ்வில் டேவிட் ஐயாவுடன் இணைந்து செயற்பட்ட பிரதான செயற்பாட்டர்களில் ஒருரான முருகேசு பாக்கியநாதன் அவரகளும், காந்திய இயக்கத்தில் தொண்டராகப் பணிபுரிந்த உஷா அவர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் ஐயாவும்; டேவிற் ஐயாவுடனான தமது நீண்ட கால அனுபவங்களைப் பற்றிய நினைவுரை ஆற்றினார்கள்.

முருகேசு பாக்கியநாதன் அவர்கள் டேவிட் ஐயாவை மட்டுமின்றி டேவிட் ஐயாவுடன் இணைந்து செயற்பட்டவரான  டாக்டர் சோ. இராசசுந்தரம் பற்றி நினைவுரையாகவும் இருக்குமென்றும் அவரது பேச்சில் பின்வரும் விடயங்கள் கூறிப்பிட்டார்.

1973 ம் ஆண்டு கடைசிப் பகுதியில் காந்திய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பிரதான நோக்கங்கள் வறுமை ஒழிப்பு, அறியாமையை அகற்றுதல், நோயை விரட்டல் என்பனவாகும். காந்திய அமைப்பின் தலைவராக எஸ். ஏ. டேவிட்  அவர்களும்  அதன் செயலாளராக சோ. இராசசுந்தரம் அவர்களும்  தெரிவு செய்யப்பட்டார்கள். இந்த  காந்திய இயக்கத்தினூடாக கிராம விழப்புணர்சி வேலைகள்  நகர சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்த  இந்திய வம்சாவழித் தொழிலாலர்கள் வதிவிடங்களிலிருந்த சிறுவர் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம்  சத்துணவு விநினோகம் ஆரம்ப சுகாதார வகுப்புக்கள் போன்ற செயற்திட்டங்கள்  நடைமுறைப்படுத்தப்பட்டன. மேலும் வன்னிப் பகுதியில் வேலைகள் அதிகரக்கப்பட்டன. குறிப்பாக  மலையக மக்கள் வாழும் பகுதிகளிலேயே பிரதான வேலைகளை செயற்படுத்தப்பட்டது.

இதில் கிராமத்துப் பெண்களுக்கும் கணிசமாக சில உதவிகள் வழங்கப்பட்டன. காந்திய இயக்கம் மேலும் தமது சேவைகைளைப் புரிய நிதி தேவைப்பட்டது. அதனால் இராசசுந்தரம் அவர்களின் உதவியுடன் நோர்வேஜிய அமைப்பிலிருந்து 25 மில்லியன் ரூபாய்களும் மேலும் உபயோகமாக பெறுமதிமிகப் பொருட்களும் கிடைக்கப்பெற்றன. அதன் பின்னர் 100 ஏக்கர் காணி பண்ணை அமைப்பதற்காகக் கிடைத்தது. அதில் அகதிகளாக வந்த இந்திய வம்சாவழியினர் குடியமர்த்தப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில்தான் மேலும் பல இளைஞர்கள் இணைந்து கொண்டு பண்ணை வேலைகளில் ஈடுபட்டார்கள். அதில் சந்ததியாரும் இருந்தார். டேவிட் ஐயா ஒரு சாதாரண உடையணிந்து மெருதுவாக குணமுள்ளவர். அவரது முக்கிய நோக்கம் தமிழர்களுக்கான மண்ணை  பாதுகாப்பதுவும் எல்லைக் கிராமங்கள்  குடியேற்றங்கிலிருந்து பாதுகாப்பதுவும் அகதிகளை குடியேற்றுவதுமாகும்.  அதற்காகவே அவர் அயராது தன் வாழ்நாள் முழுவதும் அகிம்சை வழியில் உழைத்தார். ஆனால் அவர் இயக்க நடவடிக்ககையில் எதுவும் ஈடுபடவில்லை. நாவலர் பண்ணை போன்ற சில குடியேற்றங்கள்  பல காரணங்களுக்காக வெற்றியளிக்கவில்லை. இதற்கு இராணுவக் கெடுபிடிகளும் ஒரு காரணமாக அமைந்தது. 1983 ல் டேவிட் ஐயா கைது செய்யப்பட்டு  நாலாம் மாடிக்கு அனுப்பப்பட்டார். அவர்  பின்னர் அதேவருடம்  இந்தியாவில் புகலிடம் தேடினார்.

மேலும் தொண்டராகப் பணிபுரிந்த உஷா அவர்கள் கருத்துரைக்கையில் பின்வரும் கருத்துக்களைக் கூறினார். காந்திய இயக்கம் 1976 ல் பதிவுசெய்யப்பட்டது. காந்திய இயக்கத்திற்கு முதுகெலும்பு போன்று டேவிட் ஐயாவும், இராசசுந்தரம் அவர்களும் இருந்தார்கள். பலர்  தொண்டர்கள் எலும்பு மச்சைபோன்று இருந்து பணிபுரிந்தனர். காந்திய இயக்கம்  செயற்திட்டத்தினூடாக பல குடியேற்றங்களும் 60 பாடசாலைகளும் நிறுவினார்கள். அதில் 1000 மேற்பட் ஆசிரியர்கள் பணிபுரிந்தார்கள்.  500 ற்கும் மேற்பட்ட சிறுவர் பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. டேவிட் ஐயா ஒருவரின் சுதந்திரத்தை தனி மனித உழைப்பினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று திடகாத்திரமாக நம்பினார். அது விவசாயத்தினுடாக சாத்தியப்படுமென்றும் உறுதியாக நம்பினார். உஷா அவர்கள் தானும் வேறு சிலரும்  டேவிட் ஐயாவும் இந்தியாவில் தற்கியிருந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். இந்தியாவில் இருக்கும்போது டேவிட் ஐயா நூலத்திலிருந்து 1000 ற்கும் மேற்பட்ட நூல்களை வாசித்தார் என்கின்ற ஒரு முக்கியமான தகவலையும் பகிர்ந்து கொண்டார். நேரத்தை ஒரு பொழுதும் வீணாக்க விரும்பாதவர் தனது முதிர் பருவத்திலும் 84 கட்டிட அமைப்பாளர்களுக்கு கட்டிட அமைப்புக்களைக் வரைந்து கொடுத்தார்.  தீர்க்க சிந்தனையுடனும் நேர்மையுடனும் முழுக்க முழுக்க உழைத்த அவரை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டோம்.  நாம் அவர் உயிருடன் இருக்கும் போதே அவரைக் கௌரவிக்வில்லை என்றும் கூறினார்.