Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்கள் மேல் பாறாங்கல்லை போட்ட, வரவு செலவுத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் (படங்கள்)

இன்று பிற்பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மக்களை ஏமாற்றிய வரவு செலவு திட்டத்திற்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சி நடாத்திய பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் உரையாற்றிய துமிந்த நாகமுவ; இந்த தேசிய கூட்டாட்சியின் வரவு செலவு திட்டமானது உழைக்கும் மக்களையும், அரச ஊழியர்களையும் பொருளாதார ரீதியாக மேலும் வறுமையில் வீழ்த்தும் ஒன்றாக இருப்பதுடன்; சர்வதேச கம்பனிகளிற்கும், உள்நாட்டு தரகு கம்பனிகளிற்கும் பல சலுகைகளை வழங்கியிருப்பதனை சுட்டிக்காட்டியதுடன்;  கல்வி, விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளிற்கு எந்த நன்மைகளையும் வழங்கவில்லை என கண்டனத்தை தெரிவித்திருந்தார். போராட்டத்தில் பின்வரும் கோசங்கள் முழங்கப்பட்டன.

நிதியத்தில் கை வைக்காதே! 

கூட்டரசாங்கம் பென்ஷனுக்கு வேட்டு!

குண்டு வேண்டாம் உர மானியத்தை கொடு!

வாகன புகை வரியை ரத்து செய்!

வரவு செலவு திட்டத்தில்

பொலிஸ் 600

பெட்டன் தடி 1000

கண்ணீர் புகை 5000

சிறைச்சாலைகள் ?

"අර්ථසාධකය අයිති අපට! "අත නොතබව!

"சேமலாப நிதி எமக்கு உரியது! கை வைக்காதே!

පොහොර සහනාධාරය අහෝසි නොකරන!

உர மானியத்தை ரத்துச் செய்யாதே!

විශ්‍රාම වැටුපට අත නොතබන!

ஓய்வூதியத்தில் கை வைக்காதே!

දරුවන්ගේ නිල ඇඳුමට, උප්පරවැට්ටි එපා!

பிள்ளைகளின் சீருடைக்கு தந்திரங்கள் வேண்டாம்!

අයවැය මර උගුල ජන සටනින් පරදවම!

வரவுசெலவு மரணப்பொறி மக்கள் போராட்டத்தால் தோற்கடிப்போம்!