Tue04302024

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர் குமார் குணரத்தினம் கைது!

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமை உறுப்பினர் குமார் குணரத்தினம் இன்று கேகாலைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். நோய் வாய்ப்பட்டிருந்த தனது தாயாரை பார்ப்பதற்க்காக கேகாலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்த வேளையிலேயே  தோழர் குமார் குணரத்தினம் கைது செய்யப்பட்டார்.

சித்திரை 7 2012 அன்று மஹிந்த அரசால் கடத்தப்பட்டு, அதன் பின் நாடு கடத்தப்பட்ட  தோழர் குமார் அவுஸ்த்ரேலியாவில் வாசித்து  வந்தார். இவ்வருட ஆரம்பத்தில், ஜனாதிபதித் தேர்தலின் போது, தேர்தல் கமிசனின் தலையீட்டால் இலங்கைக்கு வந்து முன்னிலை சோசலிசக் கட்சியின் தேர்தல் பணிகளில் பங்கு கொண்டு, அக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான துமிந்த நகமுவ அவர்களுக்காக பிரச்சாரம் செய்தார். இன்னிலையில் ஆட்சிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசு அவரைக் கைது செய்து மறுபடியும் நாடுகடத்த முயற்சிகளை மேற் கொண்ட்து. அரசானது, தோழர் குமார் குணரட்ணத்தின் பிரசா உரிமைக் கோரிகைக்கு  - விண்ணப்பத்திற்கு   இன்றுவரை பதில் அளிக்க மறுத்து வருகிறது. இன்று(04.11.2015) கைது செய்யப்பட்ட  தோழர் குமாரின் விடுதலையைக் கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிகின்றன .