Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ்-வேம்படி மகளிர் கல்லூரி டக்கிளஸின் சொத்தா?

டக்கிளஸின் பயமுறுத்தலால் உயிருக்கு ஆபத்து! பதவியே வேண்டாம் என்கிறார். புதிய அதிபர்

யாழ் வேம்படி மகளிர் கல்லூரிக்கு திருமதி ரேணுகா சண்முகரட்ணம் கடந்த 11-ந் திகதி முதல் அதிபராக நியமிக்கப்பட்டார். அதற்கான கடிதமும் பொதுச்சேவை ஆணைக்குழுவால் வழங்கப்பட்டது. ஆனால் புதிய அதிபராக பதவியேற்க சென்றபொழுது அவர் தனது பொறுப்புக்களை ஏற்கமுடியாமல் திரும்பியுள்ளார். ஏன் என்பதை அங்கிருந்து வரும் செய்திகள் ஊடாகப் பார்ப்போம்.

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் திருமதி வேணுகா சண்முகரட்ணம். பாடசாலைக்குச் சென்றார். அப்போது அங்கு அதிபரின் அறை இழுத்துப் பூட்டப்பட்டிருந்தது.

இது குறித்து விவரம் கேட்டபோது "பதில் அதிபர் திருமதி ராஜினி முத்துக்குமாரன் வலயத்தில் நடைபெறுகின்ற அதிபர் கூட்டத்துக்கு சென்று விட்டார்'' என்று கூறி ரேணுகா திருப்பி அனுப்பப்பட்டார். .

புதிய அதிபரை கடமைப் பொறுப்புகளை ஏற்க விடவில்லை என்ற விடயத்தை அறிவதற்காக கல்லூரி அதிபர் அலுவலகத்துக்கு நேரில் சென்ற உதயன்' பத்திரிகையின் செய்தியாளரும் பதில் அதிபரால் திருப்பி அனுப்பப்பட்டார்.

"கல்வி அமைச்சின் அனுமதிக் கடிதத்துடனேயே ஊடகங்கள் பாடசாலைக்குள் வரமுடியும். முதலில் அந்த அனுமதியுடன் வாருங்கள்'' என்று அவர் கூறினார். இது தொடர்பில் பத்திரிகை ஆசிரியர் புதிய அதிபர் திருமதி வேணுகா சண்முகரட்ணத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது "இந்தப்
பிரச்சினையைப் பெரிது படுத்த வேண்டாம் அப்படியே விட்டுவிடுங்கள். அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொள்வார். பிரச்சினை பெரிதானால் அது என்ர உயிருக்குக் கூட ஆபத்தாக மாறிவிடும்'' என்றார்.

வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் பா.விக்னேஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது "வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் விடயத்தில் எனக்கு எதுவும் தெரியாது. நடப்பதைக் கண்டு கொள்ளவேண்டியது தான; என்கின்றார்! தவிரவும் இவ்விடயத்தில் டக்கிளஸின் வெருட்டைப் பார்ப்போம்!

டக்கிளஸின் பயமுறுத்தல்: தனக்குச் சார்பானவரை ஆதரிக்க வேண்டுமாம்!

வேம்படி மகளிர் கல்லூரியில் தனக்குச் சார்பானவர் அதிபராக வருவதை ஆதரிக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்! அதுவும் .பழைய மாணவிகள் சங்கத்தின் தலைவியை நேரில் சந்தித்தே இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.

இது குறித்து பழைய மாணவிகள் சங்கத்தலைவியிடம் "உதயன் பத்திரிகையின்
ஆசிரியர் கருத்துக் கேட்டபோது, "முறையான நடைமுறைகள் மூலம் அதிபராகத் தெரிவு செய்யப்படுபவருக்கு எமது சங்கத்தின் ஆதரவு உண்டு.'' என்று பதிலளித்தோம் எனத் தெரிவித்தார்!


"இந்தப் பிரச்சினையைப் பெரிது படுத்த வேண்டாம் அப்படியே விட்டுவிடுங்கள். அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொள்வார். பிரச்சினை பெரிதானால் அது என்ர உயிருக்குக் கூட ஆபத்தாக மாறிவிடும்'' என ஓர் அதிபர் சொல்லும் அளவிற்கு யாழில் டக்ளஸின் "பாசிஸ வசந்தம்" தலைவிரித்து வீசுகின்றது.

வடக்கில் ஓர் அதிபரை நியமிப்பதில், சுதந்திரத்தன்மையற்ற போக்கில்லாமல், அரச எடுபிடிகளின் சர்வாதிகாரத் சதிராட்டம் நடைபெறுகின்றது! இதை மகிந்த சிந்தனையில் -டக்ளஸ் "வசந்தம்" என்றும் சொல்லலாம்தானே?...

--அகிலன் 19/06/2012