Sat12022023

Last updateSun, 19 Apr 2020 8am

பாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை போராட அணிவகுப்போம்.

பாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை

போராட அணிவகுப்போம்.

நாங்கள் இன்றுவரை 45 சதுர அடிக்கும் குறைவான லைன் அறைகளிலேயே வாழ்கின்றோம். எமது முந்தைய தலைமுறையினர் அனைவரும் இங்குதான் பிறந்தார்கள், இந்த லைன் அறைகளிலேயே மடிந்தார்கள். எமது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் இப்படித்தான் வாழ வேண்டுமா? இன்னும் எத்தனை தலைமுறைகள் இப்படியே வாழ வேண்டும்.

புகையிரதப் பாதைகளை அமைத்ததும், நெடுஞ்சாலைகளை அமைத்ததும் எமது மூதாதையரின் கரங்களே. அவர்கள் சிந்திய இரத்தம், வியர்வை, கண்ணீரினால் ஆயிரக்கணக்கான கோப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், இரப்பர் தோட்டங்கள் செழித்து வளர்ந்தன. அந்தத் தோட்டங்களுக்கு உரிமையுடைய கம்பனிகளின் துரைமார்களுக்கு கொழும்பில் கட்டப்பட்ட மாளிகை போன்ற வீடுகள் உள்ளன. உல்லாச வாகனங்கள் உள்ளன. அது மட்டுமல்ல, எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த அமைச்சர் மற்றும் பிரதானிகளின் சுகபோக வாழ்விற்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், வீடு கட்டிக்கொள்ள எமக்கு ஒரு காணித்துண்டும் கிடையாது. குடியிருக்க வீடு கிடையாது. தண்ணீர் கிடையாது. கழிவறைகள் கிடையாது. போக்குவரத்து வசதிகள் இல்லை. பிள்ளைகளுக்கு படிக்க வசதியில்லை. போசாக்கின்மையால் நோய்களுக்கும் குறைவில்லை.

Read more ...

முன்னோக்கி செல்லும் இலவசக் கல்வி-சுகாதாரத்திற்கான போராட்டம்- (மாணவர் இளைஞர் சமூக இயக்கத்தின் வாழ்த்துச் செய்தி)

சிறிலங்காவில் SAITM எனும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை மூடக் கோரி நடந்த போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. இலவசக் கல்வியையும்,இலவச சுகாதார சேவையை பாதுகாக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இப்போராட்டம் நடைபெற்றது.

 

முன்னிலை சோசலிசக் கட்சியின் வழிகாட்டலில் "அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்" முன்னெடுத்த இப்போராட்டம் இலவசக் கல்வியைப் பாதுகாக்க உலகெங்கும் போராடும் மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரி ஆகும்.

 

சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர் அச்சுறுத்தல்,அடக்குமுறை,வெள்ளை வேன் கடத்தல் முயற்சிகள் என இப்போராட்டத்தை ஒடுக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் மாணவர்கள் முறியடித்தனர்.

 

"சயிட்டத்திற்கு எதிரான மாணவர் மக்கள் இயக்கம்" எனும் வெகு மக்கள் அமைப்பின் தோற்றம் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. மாணவர்களுக்காக அவர்களின் பெற்றோரையும் போராட்டக்களத்திற்கு கொண்டு வந்தது.சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் பெற்றோர்கள் ஈடுபட்டதால் அரசுக்கு அழுத்தம் கூடுதலாகியது.

தற்போது அரசு சயிட்டம் திட்டத்தை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது.அரசு தனது வாக்குறுதியில் இருந்து தவறினால்,மீண்டும் போராட்டம் தொடங்கும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

முதலாளித்துவ - புதிய தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியான இத்திட்டத்தை முறியடித்த மாணவர்களை வாழ்த்துவோம்.

 

மாணவர்களுக்கு அரசியல் வழிகாட்டல் வழங்கி அவர்களுக்கு அரணாக இருக்கும் முன்னிலை சோசலிசக் கட்சிக்கும் எமது வாழ்த்துக்கள்.

 

(மாணவர் இளைஞர் சமூக இயக்கம்)
-SYSM-Students Youth Social Movement

வேண்டாம் வேண்டாம் பட்டக் கடை- வவுனியாவில் நேற்று சயிட்டத்துக்கெதிரான மாணவ மக்கள் அமைப்பு

சயிட்டத்துக்கெதிரான மாணவ மக்கள் அமைப்பினால் வவுனியாவில் நேற்று (27.09.2017 ) ஒழுங்குசெய்யப்பட்டிருந்த  மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கையின் போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகள் ஒன்றுதிரண்டு தமது எதிர்ப்பினை தெரிவத்திருந்தனர்.

அங்கு பல்வேறு அமைப்புகள் தமது காட்டமான தமது எதிர்ப்புக்களை உரை வடிவிலும், ஆர்ப்பாட்ட  ஊர்வலத்தில் கலந்து கொண்டு “வேண்டாம் வேண்டாம் பட்டக் கடை” போன்ற சையிட்டத்துக்கு எதிரான பல கோசங்களினூடு வெளிப்படுத்தியிருந்தனர். ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினை புகைப்படங்களிலும் உரையாற்றுகைகளின் ஒரு பகுதியை இங்கு காணொளியிலும் காணலாம்.

 

Read more ...

போராட்டமே ஒரு வழி ! சைடம் போராட்டம் வெற்றி !

எட்டு வருடங்களாக  நடைபெற்ற சைடம் - தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராகவும், கல்வி தனியார்மயப்படுத்தலுக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டம் நேற்று (08.11.2017) இல் வெற்றியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
 
இப்போராட்டத்தில், பங்குகொண்ட பல அமைப்புகளில் ஒரு தோழமை அமைப்பு என்ற வகையில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியானது  இப்போராட்டத்தின் வெற்றி சார்ந்து மகிழ்ச்சி கொள்கிறது.
 
அதேவேளை, இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இடதுசாரிய  மாணவர் அமைப்புகள், நேரடி ஆதரவு கொடுத்த எமது சகோதர அமைப்பான  முன்னிலை  சோசலிசக்  கட்சி, மற்றும்  இடதுசாரிய அமைப்புகளுக்கு  வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
 
எம்மைப் பொறுத்தளவில் இவ் வெற்றியானது இன, மத, பிரதேச , மற்றும் மொழி சார்ந்த பிரிவினைகள் கடந்து,   இலங்கையில் வாழும் அனைத்து  மக்களின் வெற்றியாகும். இவ்வருடத்தில் இது மக்கள்-இடதுசாரிய இயக்கங்கள் வென்றெடுத்த  போராட்டத்தின் இரண்டாவது வெற்றியாகும்.  முதலாவது, சில மாதங்களுக்கு முன் புத்தூரில் மக்களும் புதிய ஜனநாயக மா- லெ கட்சியும் வென்றெடுத்த நில  உரிமைக்கான- சுகாதார வாழ்வுரிமைக்கான போராட்டம். இன்று வெற்றி கண்டுள்ளது இலவசக் கல்விக்கான போராட்டத்தின் ஒரு பகுதி !!!! போராடுவதன் மூலம் மட்டுமே நாம் உரிமைகளை பெறமுடியும்-அவற்றைப்  பாதுகாக்க முடியுமென்பதனை, மறுபடியும் இலங்கையின் இடதுசாரிய இயக்கம் - சோசலிச அமைப்புகள் நிரூபித்துள்ளளன.  

யாழ் புத்தூர் கலைமதி கிந்துசிட்டி மயானத்தில் பிணம் எரிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவு

18.09.2017 திங்கட்கிழமை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மயானத்தை அகற்றக்கோரிய வழக்கு மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது மயானத்தை அகற்றக்கோரி வழக்கு பதிவு செய்த வழக்கறிஞர் முன்வைத்த நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 04.06.2017 அன்று மல்லாகம் நீதிமன்றத்தால் 10 அடி உயரத்திற்கு சுற்று மதில் அமைத்து அதன் பின்னர் ஒரு வருடகாலத்திற்குள் GAS CHAMPER உடல்களை எரிப்பதற்கு நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஒரு வருடத்திற்குள் GAS CHAMPER பொருத்தப்படாவிட்டால் இவ் மயானத்தில் பிணம் எரிப்பது தடுத்து நிறுத்தப்படும். முக்கியமாக அப்பகுதியில் உள்ள மக்கள் அதை அனுமதித்தால் மட்டும் தான் மயானத்தை புனரமைக்க முடியும் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், புத்தூர் கலைமதி மக்கள் யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு 17.09.2017 இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது கலைமதி மக்கள் தொடர்ச்சியான எதிர்ப்பை சத்தியாக்கிரக போராட்டமூடாக வலியுறுத்தி வருகின்றமையை சுட்டிக்காட்டிய நீதிபதி மக்களின் எதிர்ப்பையும் மீறி புனரமைப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயான விவகாரத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரையும் யாழ்.மேல் நீதிமன்றுக்கு வருமாறு நீதிபதி இளஞ்செழியன் அச்சுவேலிப் பொலிஸார், கிராம சேவகர் ஊடாக தெரிவித்திருந்தார்.

Read more ...