Mon08022021

Last updateSun, 19 Apr 2020 8am

மதப்பிடியில் இருந்து மேலும் சுதந்திரமான சிந்த்தனைக்கு கால்மாக்ஸ்சும் டார்வினுமே வழி திறந்தனர்…….! : நேர்காணல்

மரோக்கோ நாட்டை சேர்ந்த இணையப் பதிவாளர் காசிம்-எல்-காச்சாலி தனது நாட்டில் கொலை பயமுறுத்தலுக்குள்ளானார். ஏனென்றால் இஸ்லாமை விமர்சனம் செய்தார். அத்தோடு கடவுள் நம்பிக்கை அற்றவராகவும் அறியப்பட்டிருக்கிறார். தற்போது சுவிஸ்சில் அரசியல் தஞ்சம் கிடைக்குமென்று நம்புகிறார். இங்கும் (சுவிஸ்) அவர் பயமுறுத்தலுக்கு உள்ளானார்.

நீங்கள் ஒரு பிரபலமான பெயரைப் பெற்றிருக்கின்றீர்கள். அவர் கிறிஸ்துக்கு பின் 1111-ல் இறந்தது போன எல்-கச்ச்சாலி என்பவர். இஸ்லாமிய நம்ப்பிக்கையாளரும் ஒரு தத்துவவியலாளரும…!

நான் இது சம்பந்தமாக அடிக்கடி கதைத்திருக்கின்றேன். சில இஸ்லாமியர்கள் என்னிடம் கூறுகிறார்கள் இந்த பெயரை நான் பெற்றிருப்பது வெட்கக்கேடானதென்று. நான் ஒருபக்கம் இதற்காகப் பெருமைப்படுகிறேன். ஏன் என்றால் அவர் ஒரு கல்வியாளர் அத்தோடு மறுசீர்ரமைப்பாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இஸ்லாமிய அடிப்படை தீவிரவாத ஓட்டத்தை எதிர்த்தார். இதற்கான மாற்றத்தையுயம் இஸ்லாமிய கலாச்சாரம் புத்துயிர் பெறவேண்டிய அவசியத்தையும் விரும்பினார். இன்னொரு புறம் அவரது ஏனைய பார்வைகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

நீங்கள் இஸ்லாமை விமர்ச்சிக்கும் கருத்தை முன்வைப்ப்பவர் மேலும் நீங்கள் கடவுள் நம்ப்பிக்கையற்ற்றவராகவும் இருக்க்கின்றீர்கள். அக்காரணங்க்களால் சுவிஸ்சில் அரசியல் தஞ்சம் கோரியிருக்க்கிறீர்கள். நீங்கள் உணர்க்கிறீர்க்களா இங்க்கிருப்பது பாதுகாப்பானதென்று?

நான் மரோக்கோவில் கொலை பயமுறுத்தலுக்கு ஆளானேன். அதனால் தலைமறைவாக இருக்கத் தள்ளப்பட்டேன். சுவிஸ் பாதுகாப்பானது என நினைத்தேன். அத்தேடு பங்குனி 2011-இல் இங்கு வந்தடைந்த பின்னர் தான் உணர்ந்தேன். இறுதியில் மனிதனுக்கு என்னைப்போல எங்கையாவது ஒரு பாதுகாப்பான இடம் கிடைக்குமென்று. எவ்வளவு காலத்திற்கு இஸ்லாமிய மதச்சட்டங்களுக்காக அவர்களது கடவுளுக்காக சண்டை போடுவார்கள். ஆனால் இயல்பாக பல பாதுகாப்பான இடங்கள் உள்ளன. ஆனாலும் அங்கெல்லாம் பாதுகாப்பு இருக்கும் என்ற விடயம் வேறானது. அண்மையில் நான் இங்கு பாகிஸ்தானியர் ஒருவரால் கொலைப்பயமுறுத்தலுக்கு உள்ளாககியிருந்தேன். இதில் மகிழ்சியற்ற விடயம் யாதெனில் அந்த நபர் நான் குடியிருக்கும் ஒரே கட்டிடப்பகுதியில் வசிக்கிறார் என்பதுதான். நான் இவ்விடயமாக பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தேன். இருந்தும் இதற்கெதிராக அவர்களால் எதையும் மெற்கொள்ள முடியாத நிiலையே காணப்படுகிறது. மேலும் மே தினமன்று சூரிச்சில் நடந்த மரோக்கோ நாட்டைச்சேர்ந்த முற்போக்கு கலாச்சார நிகழ்வொன்றில் மனமுகந்து உதவி செய்து கொண்டிருந்தேன். அங்கு வைத்து இங்கு (சுவிஸ்) வாழ்ந்து கொண்டிருக்கும் மரோக்கோ நாட்டைச் சேர்தவர்களால் அச்சுறுத்தப்பட்டேன். அந்த நபர்கள ஒழுங்கமைப்பாளரிடம் என்னை வெளியில் தள்ளி விடும்படி கேட்டனர். அவர்கள் கூறினார்கள் எவராதவது என்னைப்போல் இஸ்லாமை விமர்சனம் செய்தால் நல்லவாழ்கை கிடைக்காதென்று.

உங்களது இணைய பதிவுகளுக்கு தொடர்ச்சியாக பயமுறுத்த்தல்கள் விடப்பட்ட்டன. இப்பயமுறுத்தலுக்கு மத்தியிலும் நிலையாக எவ்வாறு பணியாற்றினீர்கள்?

இப்பயமுறுதல்களால் எனக்குப் பயம் ஏற்படவில்லை. என்ன விடயம் என்னை முக்கியமாக பயம் கொள்ளச் செய்கிறதென்றால், இந்த உலகம் இந்த காட்டுத்தர்பார்ரை எதிர்க்காமல் ஓதுங்கிக்கொள்ள முனைவதேயாகும். நான் பலவருடங்களாக இப்பயமுறுத்தலோடுதான் வாழ்ந்தேன. நான் இதிலிருந்து வெளியேறப்போவதில்லை எனது கருத்துக்களைத் துறந்து விடவும்மாட்டேன். எனது உறுதியான நம்பிக்கையே என்னை உள்ளார்ந்த இணைவோடு இயங்க விட்டுள்ளது. அத்தோடு இஸ்லாமிய நாடுகளில் மிக நல்லதொரு சாதகமான நிலமை காணப்படுகிறது. அங்கெல்லாம் இவாவாறான சிந்தனையைத் தொடர்வதற்கு பயமுள்ள தன்மை காணப்படுகிறது. பெயர் குறிப்பிடப்படாத வலைப்பதிவுகளினால் மட்டுமே இவற்றை வெளிப்படுத்த முடியும்.

நீங்க்கள் மரோக்கோவில் வரலாற்று வாழ்வியல் தனித்துவம் கொண்ட (Berber) கிராமமொன்றில் வளர்ந்துள்ளீர்கள். அங்கு நிலவும் பொதுப்படையான நிலைமைகளை எவ்வாறாக விபரிப்பீர்கள்?

இக்கிராம மக்களின் சகிப்புத்தன்மை என்பது நன்கு அறியப்பட்ட விடயமாகும். அம்மக்கள் ஏனைய மக்களுடன் தமது ஒற்றுமையை கட்டியெழுப்பயிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் சமமான உரிமையைப் பெறுகின்றனர். பெண்களும் மண விவகாரங்களில் ஆண்களைப்போல் உரிமையைக் கொண்டுள்ளனர். இஸ்லாமின் புராதனக் கதைகளை நம்ப மறுத்ததே என்னுடைய தனித்துவத்தின் மூலமாகும். நான் சாத்தியமான பொதுவான விடயங்களைத்தான் நம்புகிறேன்.

உங்களது அடி ஒரு பக்தியுள்ள் குடும்பத்தைக் கொண்ட்டதாகும். அத்தோடு குரான் பாடசாலையில் சேர்த்திருந்தீர்கள். நீங்ககள் என்ன காரணத்திற்க்காக மதப் பாடசாலையிலிருந்து திரும்பி வந்தீர்கள்?

எனது குடும்பத்தினர் என்னை மெக்னெஸ் (Meknès)-ல் இருக்கும் குரான் பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர். அது இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளால் வழி நடத்தப்படுகிறது என்ற விடயத்தை அவர்கள் தெரிந்து இருக்கவில்லை. அது பல கட்டுபாடுகளைக் கொண்ட ஒரு இறுக்கமான மத அமைப்பாகும். நான் அங்கு நுழைந்தவுடன் அவர்கள் கூறினார்கள், நான் இஸ்லாமிய வகை ஆடையை அணிய வேண்டுமென. என்னை ஒரு கடைக்கு அழைத்துச்சென்றனர். கூறியது போல் அவ்வாறான உடையை வாங்கினார்கள். அப்பொழுதிருந்தே நான் கடவுள் நம்பிக்கையற்றவனாக என்னுள் தெரியத் தொடங்கினேன். நான் அங்கு பழமைவாத அடிப்படை மதப்போதனை முறைகளைக் கொண்டு கையாளப்பட்டேன். அந்த நம்பிக்கையை நான் பெற வேண்டும் என்பதைத்தான் அவாகள் என்னிடம் எதிர்பார்த்தார்கள். அது வேறு ஒரு சக்தியோடு ஒரு விசேடமான தொடர்பை மதநம்பிக்கை உணர்வை பெறுதல் என்பதாகும். எனக்கு அவ்வாறான உணர்வு ஏற்படவேயில்லை. அப்பொழுது எனக்கு பதினாங்கு வயதாகியிருந்தது. அரை வருடங்களில் நான் அந்த குரான் பாடசாலையை விட்டு வெளியேறினேன். ஏன் என்றால் நாங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து விடவேண்டும். அன்று ஒருமுறை வழங்கப்படும் உணவோடுதான் நடுச் சாமம் வரைக்கும் இருக்க வேண்டும். நான் கட்டாய வருத்திற்கு உள்ளானேன். நான் எனது சொந்தக் கிராமத்திற்கு திரும்பியிருந்தேன்.அங்கு எனது மாமா ஒருவர் அவர் என்றும் தன்னை நாத்திகராக வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவர் ஒருநாள் தனது வாசகசாலையில் புத்தகங்களின் அடியில் இருந்து கால்மாக்ஸ், டார்வின் ஆகியோரின் புத்தகங்களைத் தந்தார். நான் அவற்றை படிக்கத் தொடங்கினேன். அதில் அவர்களது பலகருத்துக்கள் என்னைக் கவர்ந்தது. அதுதான் எனது சுதந்திரமான சிந்தனைக்கான முதல் அடியும் வழிகாட்டியுமாகும்.

எக்காரணத்திற்க்காக நீங்கள் இஸ்லாம், நாத்திகம் பற்றிய சிந்தனைகளை வலைப்பதிவில் ஆரம்ப்பித்தீர்கள்?

எப்போது ஒரு மனிதன் சமூகத்தில் வாழ்கிறானோ அவன் கேட்பதை மட்டும் உணர்பவனாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில் ஒன்றினுடைய சுதந்திரமான சிந்தனை வெளியையும் இழந்து விடக்டாது. அதனால் தான் மனிதன் கேள்விகளை எழுப்புகிறான். அக்காரணத்தினால் தான் நான் இந்த உண்மை நிலையை தோற்கடிக்க விழைகிறேன். அல்லது இதற்கு பதிலாக மாற்றம் ஒன்றைக் கொண்டு வரமுடியுமா? அக்காரணத்தினால் எனது சுதந்திரமான சிந்தனையின் முதல் அடியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. அல்லது நான் உலக மனித உரிமைப் பாதுகாப்பு பற்றி குரல் கொடுக்க முடியுமா? நான் எதில் இருந்து எனது நம்பிக்கையை அடைந்தேனோ கடைசியில் அவ்விடயங்களில் இருந்து பேசவே முனைந்தேன். ஏனெனில் நான் எப்போதும் எனது உயர்பாடசாலையில் எனது கிராமத்தில் இவ்விடயங்கள் பற்றியதான ஏதோ விவாதங்களில் ஈடுபடவே விரும்பினேன். ஆனால் பாடசாலைலயில் இது பற்றி பேசவோ கேள்விகளை எழுப்பவோ அல்லது சுதந்திரமாக எனது கருத்துக்களைச் சொல்லவோ நான் அனுமதிக்கப்படவில்லை. எனது ஆசிரியர் அதை தடை செய்திருந்தார். எனக்கு எனது சிந்தனைகளை எவருடனாவது பகிர்ந்து கொள்ள 2008-இல் ஒரு இணையப்பதிவை ஆரம்பிப்பதைத் தவிர வேறு எந்த தேர்வும் இருக்கவில்லை. இருந்தாலும் நான் பெயரை வெளிப்படுத்தாமலே அதை இயக்கினேன். இருந்தும் ஒரு நாள் Facebook-ல் பயமுறுத்தல் விடப்பட்டது. இதுவரை எனக்குத் தெரியவில்லை இதை யார் வெளிப்படுத்தினார்கள். அது எவ்வாறு நடைபெற்றது என்று.

உங்க்களது பெயர் கண்டறியப்பட்டதின் பின்னால் எவ்வாறாகப் பார்க்கப்பட்ட்டது?

நான் பல அழுத்தங்களை எதிர் நோக்கினேன். எல்லோரும் எனக்கு எதிராகவேயிருந்தார்கள். நான் எனக்கான பாதுகாப்பைத் தேடினேன். அதற்காக எனது வலைப்பதிவை ஊடகங்களில் தெரியப்படுத்தினேன். 2010-ஆம்மாண்டு முதன் முதலாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிலையமொன்றுக்கு இவ்விடயமாக செவ்வியொன்றை வழங்கியிருந்தேன். ஒரு இஸ்லாமிய நாடொன்றில் கடவுள் நம்பிக்கையற்ற வலைப்பதிவொன்றை நடத்துவதென்பது வாழ்வில் எவ்வளவு கஸ்டமானது. அதற்காக என்மீது கொலை பயமுறுத்தலான ஆத்திரங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

உங்களது வலைப்பதிவு தெரியப்பட்டதின் பின்னர் ஏற்ப்பட்ட விளைவுகள் எவ்வாறு இருந்தது?.

நான் தொடர்ந்து உயர்பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தேன். அதிகமான பாடசாலைத்தோழர்கள், நண்பர்கள் முற்றிலும் எனக்கெதிராக மாறியிருந்தார்கள். பாடசாலைக்குச் செல்லும் வழியில் என்னுடன் எவரும் கூடி வருவதே கிடையாது. அதிகமானவர்கள் என்னிடம் வந்து போவதையும் நிறுத்திக் கொண்டார்கள். பாடசாலையில் ஒருநாள் இஸ்லாம் மத ஆசிரியர் மதப்பாடம் போதித்துக் கொண்டிருக்கும் வேளையில் மொகமட்டின் கேலிச்சத்திரத்தை வரைந்தவர் டென்மார்க்கில் இல்லவேயில்லை யெனக்கூறினார். ஆனால் அவருக்கு தெரியும் யார் அதை வரைந்தது என்று. அத்தோடு தனது Laptop–ல் எனது வலைப் பதிவுகளை மாணவர்களிடம் காட்டினார். நான் மதநம்பிக்கையை துறந்து விட்டிருப்பதாகவும் அதற்காக மதத்தொண்டர்களால் மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அதை நான் சம்பாதித்து விட்டிருப்பதாகவும் கூறினார். இவ்விடயம் பாடசாலைப் பணிப்பாளர்ரிடமும் புகார் செய்யப்பட்டிருந்தது. அவர் என்னை தனது அலுவலக அறையில் வைத்து அடித்தார். மேலும் ஒரு வெள்ளிக்கிழமைத் தொழுகை நடந்து கொண்டிருந்த போது மதத் தலைவர் எனது கிராமத்து மக்கள் முன்வைத்து என்னை எச்சரித்தார். பெரிய நகரங்களில் அதாவது மராக்கேஸ்ல்((Marrakesch) தான் இவ்வாறான தீர்ப்பு முறைகள் நடைமுறையில் உள்ளன. இங்கு எனது நாத்திகக் கருத்துக்களுக்கான கிராமத்து மதத்தலைவரின் எச்சரிக்கை என்பது நம்ப முடியாமல் இருந்தது. இக்கடவுள் மறுப்பு விவகாரமும் இவ்வாறான கடவுள் நம்பிக்கையற்றவர்கள் தமது நாட்டிலும் உள்ளனர் என்ற விடயமும் அது வெளிப்படையாக தெரிய வந்ததென்பதும் அவர்களுக்கொரு அனுபவமாகும். மரோக்கானர் மத்தியில் இது ஒருவித அதிர்ச்சியை உண்டு பண்ணியது.

உங்களது குடும்பத்தினரும் உறவினரும் எவ்வாறு எதிர்ப்புக் காட்டினார்கள்?

சிறிதளவு உறவினர்கள் எனது கடவுள் மறுப்பு நிலைப்பாட்டால் ஒருஅதிhச்சி நிலையில் இருந்தனர். மாமிமார்கள் சித்தி முறையானோர் எனது அம்மாவை ஒதுக்கி வைத்தனர். ஆரம்பத்தில் எனது தகப்பனார் என்னை வெறுத்தார். என்னை தனது வீட்டை விட்டுப் போகும்படி கூறினார். என்னுடைய தாய் கவலையாகவேயிருந்தார். அத்தோடு எனக்கு எப்போதும் பாதுகாப்பாகவும் ஆறுதலாகவும்மிருந்தார். எனது கிராமத்தைச் சேர்ந்த அதிகமான மக்கள் எனது கடவுள் நம்பிக்கையற்ற நிலைப்பாட்டை நம்ப முடியாமல் இருப்பதாகவும் நான் ஒரு நல்ல மனிதனாக இருந்ததாகவும் அதை எனது பெற்றோரிடம் கூறியிருந்தனர்.

எக்க்காரணத்த்திற்க்காக நீங்கள் சுவிஸ்சில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தீர்கள்?

சுவிஸ் எனது தனித்துவமான தெரிவாகவிருந்தது ஏன் என்றால் மரோக்கோ நாட்டில் இருந்து அரசியல் தஞ்சம் கோருபவர்களை அனுமதித்துக் கொண்டிருந்த ஒரே நாடு சுவிஸ் ஆகும். அதேநேரம் நான் நம்புகிறேன் இஸ்லாமிய மயப்படுத்தல் என்னும் புற்றுநோய் ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிட சுவிஸ்சில் பலமானதாக அமைந்திருக்கவில்லை. அதிகமான இஸ்லாமியர்கள் ஐரோப்பாவை நோக்கி வருகிறார்கள். ஏன்னெனில் தமது சொந்த நாட்டில் திருப்தியற்ற நிலையில் உள்ளனர். இங்கிருக்கும் மதசார்பற்ற முறையில் அவர்களும் பயனடைகிறார்கள். அம்முறையானது உங்களுடைய மக்களுக்கான மனிதஉரிமைகளை உத்தரவாதம் செய்கிறது. அதேநேரத்தில் முரண்பாடுகளை சுதந்திரமாகவும் மனித உரிமையோடும் கையாளப்படுகிறது. அதனால்தான் அதை ஆதரித்து இங்கிருக்கும் இடம்பெயர்வு அரசியலைத் தேர்ந்தெடுத்தேன். உண்மையில் அதைக் கோரிநிற்கும் ஒருவர் மனித உரிமையையும் மதசார்பற்ற தன்மையையும் அதன் பெறுமதிகளையும் கவனமாக உள்வாங்க வேண்டும். இங்கு வைத்து எனக்கு பாகிஸ்தானியரும் மரோக்கோவைச் சேர்ந்தவர்களும் அச்சுறுத்தல் விடுத்தபோது நான் எவ்வாறான உணர்வுக்குள்ளானேன் என்பதை என்னால் எழுத முடியாது. எப்படி அது சாத்தியமாகும்?. இந்த ஆட்கள் தப்பிவந்து இங்கு அரசியல் தஞ்சம் கோரியவர்கள். இது சுதந்திரமான கருத்துச்சுதந்திரத்திற்கும் சுதந்திரமான இணைந்த வாழ்வுக்கும் ஒரு ஆபத்தான விடயம். இக்காரணத்தினால் நான் நம்புகிறேன். உலகளவில் இன்னும் மனித உரிமையையப் பலப்படுத்தல் தனிமனித சுதந்திரத்தை நிலைநாட்டுதல் போன்ற விடயங்கள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். அதேபோல் பொருளாதார கலாச்சார விழுமியங்களும் விருத்திபெற வேண்டும். அதனால் குடிபெயர்தல் என்ற பிரச்சனையை நீண்டகாலத்தில் இல்லாமல் செய்துவிட முடியும். அவ்வாறு இல்லாவிடின் அறியப்பட்டிருக்கும் இப்பிரச்சனைகளால் குடிபெயர்தல் என்ற பிரச்சனை பூதாகாரமாக வெடிக்கும்.

உங்களது அரசியல் தஞ்ச விண்ணப்பம் தொங்கி நிற்க்கிறது நம்புகிறீர்களா சாதகமான முடிவு கிடைக்குமென..!

சிலவேளை எனக்காக சொல்லப்பட்டிருக்கும் விடயம் யாதெனில் எனது நிலமைகள் ஊடாக சுவிஸ் அரசானது ஏற்கனவே ஒரு முடிவிற்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் எப்போது எனக்கு இங்கு வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டதோ அதிலிருந்து இது புலனாகிறது. நான்சட்ட விரோதமாக இங்கு வரவில்லை. அதிகமான அரசியல் தஞ்சக் கோரிக்கைகள் பரிசீலனைக்காக தொங்கிக்கிடக்கிறது. நான் ஏதோ பொறுமை காக்க வேண்டும்.

நிபந்தனைகளைத் தாண்டி அரசியல் தஞ்சக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு உங்களுக்கு இங்கு வாழமுடியுமென்றால் எதிர்காலத்தில் உங்களது விருப்ப்பம்¨!

சுதந்திரமான ஜனநாயக மனித உரிமை அமைப்பொன்றை வடஆபிரிக்காவிலும் அதன் கிழக்கையண்டிய பகுதிகளிலும் ஆரம்பிப்பது. மேலும் அமைப்பொன்றை மதசார்பற்ற இடம் பெயர்ந்திருக்கும் இஸ்லாமியர்களுக்காக நிறுவுதல். அதனை சர்வதேச மனித உரிமைக்கான அமைப்புக்கள் ஏதாவதின் அதாவது AmnestyInternational, HumanRight watch அங்கிகாரத்திற்கு இட்டுச்செல்லல் ஏன்னென்றால் இஸ்லாமிய மத அமைப்புகளின் கண்டனங்களையும் நிபந்தனைகளையும் அத்தோடு இன, நிறவெறிப் பயமுறுத்தல்களையும் கண்காணிப்பதற்காகவேயாகும்.

அவர் பற்றிய குறிப்புக்கள்.

Kacem El-Ghazzali

Marokkanischer Blogger

und Menschenrechtsaktivist

1990-ல் மரோக்கோவில் தனித்துவ வரலாற்று வாழ்வியல் அடையாளத்துக்குரிய (Berber) கிராமத்தில் பிறந்து வளாந்தார். அத்தோடு ஒரு குரான் பாடசாலையிலும் சேர்ந்தார். தனது பதினாலாவது வயதில் அப்பாடசாலைலயை விட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பினார். 2008ல். பெயர் குறிப்பிடப்படாத வலைப்பதிவை ஆரம்பித்தார். இஸ்லாமை அதன் மதச்சட்டங்களை விமர்சனம் செய்தார். கடவுள் நம்பிக்கையற்றவராகவும் தெரிய வருகிறார். பின்னர் அடையாளம் காணப்படுகிறார். அதன் பிறகு கொலைப்பயமுறுத்தலுக்கு உள்ளானார். முடிவில் தலைமறைவாகி மரோக்கோவில் இருக்கும் சுவிஸ் தூதுவராலயத்தில் அரசியற் தஞ்சம். கோரினார். அதன் பின்னர் 2011- märz-ல் சுவிஸ்சிற்கு பயனமானார். அவரது அரசியல் தஞ்சக் கோரிக்கை இன்னும் பரிசீலனையில் உள்ளது. அவர் தற்போது சுவிஸ்சில் Thurgau மாநிலத்தில் வாழ்கிறார். அவரது வலைப்பதிவானது தொடர்ந்து அராபிய ஆங்கில மொழிகளில் பதியப்படுகிறது. உள்டக்கம் பொதுவாக மனித உரிமைகளை நிலைநிறுத்தியே காணப்படுகிறது. ஜனநாயக மனித உரிமைக்கான அமைப்புக்களின் அழைப்பையேற்று அண்மையில் சூரிச் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். அவ்விடயமானது "அராபிய வசந்தமும் அராபிய முற்போக்கு இணையப்பதிவுகளின் உள்ளார்ந்த வெளிப்பாடு" என்பதாகும்.

Atheistica.com

Forumzurich.wordpress.com

சூரிச்சில் இருந்து வெளியாகும். DER LANDBOTE என்ற பத்திரிகையில் இருந்த நேர்காணல். (நன்றி--DANK)

தமிழ் மொழியில்- திலக்