Fri09242021

Last updateSun, 19 Apr 2020 8am

SAITM - உடனடியாக ரத்து செய் !

ஆகஸ்ட் 02 தேசிய எதிர்ப்பு தினத்தை வெற்றிகரமானதாக்குவோம். 

இந்த நிமிடம் வரை சைட்டம் திருட்டு பட்டக் கடையை ரத்து செய்யக்கோரி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவ பீடங்கள் எட்டிலும் உள்ள விரிவுரையாளர்களின் தொழிற்சங்கங்கள், மற்றும் மாணவர்கள், அந்த மாணவர்களின் பெற்றோர்கள், பல்கலைக்கழக பொது மாணவர்கள், அரச மருத்துவ சங்கம், தொழிற்சங்கங்கள், மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிஸக் கட்சி, கூட்டு எதிர்க்கட்சி உட்பட பொது மக்கள் போராடுகிறார்கள்.

வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் ரணில், மைத்ரி கூட்டு அரசாங்கத்திற்கு தேவையாக இருப்பது மருத்துவ பட்டத்தையும் மற்ற அனைத்தையும் போன்று விற்பனை சந்தையில் விற்று தின்பதற்கே.

நோயாளிகளின் உயிர் தொடர்பாகவோ, கல்வியின் தரம் தொடர்பாகவோ இந்த கொடிய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வதில்லை. அதனால் செவிட்டு யானைகள் போன்று தமது நடத்தையினால் வெளிக்காட்டி, சைட்டம் முதலாளியின் தாளத்திற்கு ஆடி , பொது மக்களை அடக்கி ஒழிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

 

போலீஸ் மூலம் நீதிமன்ற ஆணைகளை பெறுவதும் , கண்ணீர் புகை பிரயோகம், அமுக்கம் கூடிய நீர் தாக்குதல்கள், குண்டாந்தடி இராணுவம், வெள்ளை வேன் பயன்படுத்தி கடத்துதல், தடிகள், பொல்லுகள், சைக்கிள் செயின்கள், வாள்கள், கத்திகள் கொண்ட பாதாள கோஷ்டிகளை பயன்படுத்துவது சைட்டம் முதலாளியை பாதுகாப்பதற்கே.

சைட்டம் முதலாளியின் நஷ்டத்தில் இயங்கும் வைத்தியசாலையை அரசுக்கு சுவீகரித்து, மக்களின் வரிப் பணத்தில் சைட்டம் முதலாளியை செல்வந்தனாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவ சபைக்கும் அரசாங்கத்தின் எடு பிடிகளை நியமிக்கவவே முயற்சி நடக்கிறது.

 

 

சைட்டம் முதலாளியின் பணத்தை விழுங்கிய அரசாங்கத்தின் பெரிய தலைகளுக்கு, சட்ட விரோத சைட்டம் திருட்டு பட்டக் கடையை மூடிவிடுவதற்கு எவ்வித தேவைப்படும் இல்லை. 

இப்போது மக்கள் ஒரு அணியில் திரண்டு சைட்டத்தை ரத்து செய்ய வற்புறுத்தும் போராட்டத்தை சக்திமிக்கதாக மாற்றுவதற்கு ஒரு அடி முன்னெடுத்து வைக்க வேண்டும். ஆகஸ்ட் 02 தேசிய எதிர்ப்பு தினத்தை அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றிகரமானதாக ஆக்கவேண்டும் அதனாலேயே.

 

அரச நிறுவனங்களை விற்பனை செய்தல்.

 

அரச நிறுவனங்களையும், வளங்களையும் விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தயார். கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குத்துறை, ஹம்பாந்தோட்டை துறைமுகம் , எண்ணெய் தாங்கிகள் மற்றும் காணி, திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் தாங்கிகள, தபால், ஸ்ரீ லங்கன் எயார், புல்மோட்டை கனிய வளம், கஹடகஹா காரிய சுரங்கம் போன்றவை இந்த நிமிடம் வரை ஆபத்தின் முன் நிற்கிறது. 

அதே போன்று அதற்கு எதிராக அந்த நிறுவங்களின் உள்ளேயே போராட்டங்கள் வெடித்துள்ளன. கனிய எண்ணெய் வள சேவையாளர்கள் பாரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு எதிராகவே. தொழிற்சங்களின் நியாயமான போராட்டங்களுக்கு ஒவொருவரினதும் ஒத்துழைப்பு தேவைப்படும் நேரமிது.  

 

ஓய்வூதிய வெட்டு

 

2016 ஜனவரி முதல் அரச சேவைக்கு உள்வாங்கப்படுபவர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அரசாங்கம் செய்ய முற்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும். 2016 ல் மட்டுமல்ல அதற்கு முன் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களினதும் ஓய்வூதியத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு தேவை உள்ளது.

 

எட்கா உடன்படிக்கை 

 

அரசாங்கம் இந்தியாவுடன் எட்கா என்ற பெயரில் வியாபார உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட தயாராக உள்ளது. 

மக்களின் வேலை வாய்ப்பை இல்லாதொழிக்கும் , மக்களின் வேதனத்தை குறைக்கும், சிறிய நடுத்தர வியாபாரங்களை கீழே வீழ்த்தும் இந்த பீதி நிறைந்த எட்கா உடன்படிக்கையை தோற்கடிப்போம் .

இது பொதுமக்களின் எரியும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது . இவற்றை தீர்க்க அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.

ஆகஸ்ட் 02 தேசிய எதிர்ப்பு தினத்தை வெற்றிகரமாக்குவதன் மூலம் சைட்டத்தை உடனடியாக மூடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி பாரிய வற்புறுத்தலை செய்வோம்.

அதற்காக,

 

ஊர்வலங்கள் ஏற்பாடு செய்க,

நிறுவனங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் செய்க,

எதிர்ப்பு மனுக்களில் கையொப்பமிடுக,

கறுப்பு கொடி பறக்கவிடுக,

கறுப்புப் பட்டி அணிக,

அனைவரும் ஒன்றிணைவோம், 

போராடுவோம்,

வெற்றி பெறுவோம்.

 

சைட்டம் எதிர்ப்பு மக்கள் அரண்