Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏன்? எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் ???

எங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO) நியமனங்களுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு எதிரானதல்ல. மாறாக,

1) SLMC இனாலோ அல்லது WHO இனாலோ மருத்துவக் கற்கை வழங்குவதற்கான கல்லூரிகளுக்கு இருக்க வேண்டிய அவற்றின் தகுதி நியமங்களை ஒழுங்கான முறையில் கொண்டிருக்காத,

2) 2008 ம் ஆண்டு SAITM (South Asian Institution of Technology and Management) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, பின்பு அப்போதைய உயர்கல்வி அமைச்சரை வளைத்துப் போட்டு, "M for Medicine" என பெயர் மாற்றி, அவ் அமைச்சரைக் கொண்டு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரு சட்டவிரோதமான முறையில் உருவாக்கம் பெற்ற,

3) "சட்ட விரோதமாக உருவாக்கம் பெற்ற, ஒரு மருத்துவக் கல்லூரிக்கு இன்றியமையாத தேவையாக உள்ள போதனா வைத்தியசாலையொன்றை ஆரம்பத்தில் கொண்டிராத, பின்பு சாட்டுக்காக "நெவில் பெர்ணாண்டோ போதனா வைத்தியசாலை" என்ற பெயரில் ஐந்து பத்து நோயாளிகளைக் கொண்ட ஓர் மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியாகும் மருத்துவப் பட்டதாரியை அங்கீகாரம் அளிக்க மாட்டோம், ஆகவே உங்கள் பிள்ளைகளை அங்கு கல்வி கற்க அனுமதிக்க வேண்டாம்" என பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் எச்சரித்த SLMC ஐயும் மீறி, தம் பிள்ளைகளை அங்கு சேர்த்து விட்டு, இன்று எமக்கும் ஸ்டெத்தஸ்கோப் ஏந்த உரிமை உண்டு,

அந்த உரிமையை மறுக்கும் SLMC கலைக்கப்பட்ட வேண்டும் என இவ்வளவு காலமாக இலங்கையின் மருத்துவர்களையும் மருத்துவத் துறையையும் சர்வதேச தரத்துக்கு பேண அர்ப்பனிப்புடன் செயற்படுகின்ற SLMC ஐயே நீதிமன்றத்துக்கு இழுக்கின்ற,

4) இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ 0.1 % ஆன மக்களால் மாத்திரம் செலுத்தி தம் பிள்ளையைப் படிப்பிக்கக் கூடிய, ஏனைய 99.9% ஆன சாதாரண நடுத்தர வர்க்கத்தினால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத கல்விக்கட்டணத்தை (இன்றைய நாளில் சுமார் 120 இலட்சம்) அறவிடுகின்ற,

5) ஆக மொத்தத்தில் எதிர்கால இலங்கையை போலி டாக்டர்களின் பூமியாக, இன்றைய நாள் வரையிலும் சிறப்பான தராதரத்துடன் காணப்படும் இலவச சுகாதார, மற்றும் இலவசக் கல்வியின் இருப்பைக் கேள்விக்குறியாக்குகின்ற,

6) ஒரு வைத்தியனாக வர வேண்டுமா ? அவ்வாறேனில் நீ கட்டாயம் ஓர் அரசியல்வாதியின் மகனாகவோ, அல்லது ஓர் கோடீஸ்வரனின் பிள்ளையாகவோ இருந்தால் மாத்திரமே முடியும் எனும் நிலைமையை இலங்கையில் ஏற்படக் காரணமாய் அமையப் போகின்ற, (இங்கு வெளிநாட்டு தனியார் கல்விக் கூடங்கள் இலங்கையின் இலவசக் கல்வியில் எவ்விதத் தாக்கத்தையும் செலுத்துவதில்லை என்பதைக் கருத்தில் கொள்க)

ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி எனும் பெயரில் இயங்கி வரும் ஒரு மாபியா கும்பலுக்கு எதிரான போராட்டமே.

மாறாக, 

1)WHO இனால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட,

2)SLMC இனால் அங்கீகரிக்கப் பட்ட,

3)ஒரு தரமான மருத்துவரைக் கற்பித்து வெளிடக் கூடிய வளங்களைக் கொண்ட, (பௌதீக வளத்தை விட இங்கு கற்றல் வளமே முக்கியமாகக் கொள்ளப் படுகின்றது)

4)அரச மருத்துவபீட மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சை, அல்லது மருத்துவப் பயிற்சிக்கான அனுமதிப் பரீட்சை (ERPM - Examination for Registering to Practising Medicine ) போன்ற பொதுவான, SLMC இனால் வகுக்கப்பட்ட நெறிமுறைகளுக்கு அமைவான முறையில் இயங்குகின்ற தனியார் மருத்துவக் கல்லூரிக்கு இலங்கை அரச மருத்துவபீட மாணவர்கள் என்றும் எதிரிகள் அல்ல. 

இப்போராட்டம் தனியே அரச மருத்துவபீட மாணவர்களின் சுய லாபத்திறகான ஒன்றல்ல.

எதிர்கால சந்ததியின் இலவசக் கல்வியையும், இலவச வைத்திய சேவையையும் உறுதிப் படுத்துவதற்கான ஓர் போராட்டமே!

Let_us_stand_against_SAITM